உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

165

10-க்கு 9 பேர் உங்களை நம்பவில்லை ; உங்களை ஆதரிக்கவில்லை 9 என்று சொன்னார்கள்.

சரி,

பாராளுமன்றத்திலேயும் சரி, சட்டமன்றத்திலேயும் சரி இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோரைக் கணக்கிலே எடுத்துக்கொண்டுதான் ஆட்சியின் பலத்தை நிர்ணயிப்பது வழக்கம். ஆனால் டாக்டர் ஹாண்டே அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஹாண்டே ஒரு டாக்டர். ஒருவனுக்கு காய்ச்சல் வந்தால் அவனுக்கு எத்தனை டிகிரி காய்ச்சல் அடிக்கிறது என்று பார்க்கவேண்டுமென்றால் தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்துத்தான் சொல்வார். அதைப்போல இந்த நாட்டிலும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்பதை 1971-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பெரும்பான்மை வாக்கு என்னும் தெர்மாமீட்டரை வைத்துக் கணக்கெடுத்து, ஆளத் தகுதி உடையவர்கள்தான் என்று அனுப்பியிருக்கிறார்கள்.

டாக்டர் எச்.வி.ஹாண்டே : உங்கள் தர்மாமீட்டர் பழசு, அது கெட்டுப்போய்விட்டது என்று சொன்னேன்.

மு

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : என்னுடைய தர்மாமீட்டர் பழசா புதுசா என்பதை டாக்டர் ஹாண்டே அவர்களுக்கு ஜுரம் வரும்போது வைத்துப்பார்த்தால் தெரியும் (பலத்த ஆரவாரம்). ஆகவே, மக்கள் மன்றத்தினுடைய ஆதரவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்த மன்றத்தினுடைய ஆதரவில் இருந்து தெரிந்து கொள்ளலாம். முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்துத் தான்-எங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். 1967-லும் வாக்களித்தார்கள். 1971-லும் வாக்களித்தார்கள். அதன்மூலம் மக்களின் முழு நம்பிக்கையையும் மகோன்னதமான முறையில் எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுடைய அந்த ஆதரவினால்தான் நாங்கள் இங்கே வீற்றிருக்கிறோமே அல்லாமல் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ, அந்தஸ்திற்காகவோ, கௌரவத்திற்காகவோ நாங்கள் இங்கே இல்லை. எந்த மக்கள் எங்களை நம்பி இங்கே அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களுக்காக என்றும் உதவ, உழைக்க நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அதற்காக எங்கள் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.