உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அலிபாபா கூட்டம் என்றால் அலிபாபா ஆதிக்கம் உள்ள கூட்டம் என்று அர்த்தம். அலிபாபா ஆதிக்கம் உள்ள கூட்டம் என்றால் அங்கேயிருந்த 40 திருடர்களுக்கும் தலைமை வகித்ததாகப் பொருள். ஒரு வேளை நாம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நேற்று அரேபியன் நைட்ஸ் கதைகளை வாங்கி இரவெல்லாம் படித்துவிட்டுத்தான் வந்தேன். கதையில் 40 திருடர்களைப் பிடித்தான் அலிபாபா என்றுதான் வருகிறது. (கைத்தட்டல்) ஆகவே அலிபாபா ஒரு வீரன். திருடர்களை, கொள்ளைக் காரர்களைப் பிடித்தவன். திருடர்கள் அலிபாபாவைக் கொல்வதற்காக வந்தபோது அலிபாபாகூட தன் காதலியோடு சேர்ந்துகொண்டு பீப்பாய்களிலேயே இருந்த திருடர்களை எல்லாம் பொசுக்கித் தீர்த்து விட்டான் என்றுதான் கதை முடிகிறது. ஆகவே அலிபாபா யார்? திருடர்கள் யார்? (கைத்தட்டல்) என்பதை நம்முடைய எதிர்காலம் உணர்த்தும்.

திரு. கோவை செழியன் : நீங்கள் சொல்கிற வாதத்தைப் பார்த்தால் அந்தத் தலைவன் நல்லவன், மற்றவர்கள் மோசம் என்று சொல்கிறபோது, நீங்கள் நல்லவர் என்பதையும், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் மோசம் என்பதையும் நீங்களே ஒத்துக் கொள்கிறீர்களா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அந்த அலிபாபாவின் எதிரிகள் திருடர்கள். (கைத்தட்டல்) அதுதான் கதை, படம் எடுக்கிற தயாரிப்பாளர் செழியனுக்கு கூடவா கதை தெரியவில்லை? (பலத்த கைத்தட்டல்) அலிபாபா என்கிறவன் நல்லவன், அவனுடைய எதிரிகள் திருடர்கள். இதுதான் கதை. (சிரிப்பு).

பொதுவாக இந்த மன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானமானாலும், கண்டனத் தீர்மானமானாலும் இங்கு நடைபெற்ற நான்கைந்து நாட்கள் விவாதத்தில் மிக உயிர்ப்புள்ள பிரச்சினையாக இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிற உணவுப் பிரச்சினை குறித்து எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இதிலே யாரும் அரசைக் குறை கூறவேண்டு எண்ணத்தோடு, அவரவர்கள் கட்சியினுடைய

மன்ற