316
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
வற்றிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பிரதமருடைய நான்காவது அறிவிப்பு. கிராமப்புற மக்களின் கடன் சுமையைப் போக்குவது மாத்திரமல்லாமல், நகரப்புற மக்களுடைய கடன் சுமையையும் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிற வகையிலே 1972ஆம் ஆண்டு ஒரு கடன் நிவாரணச் சட்டம் கொண்டு வந்தோம். 1975ஆம் ஆண்டு கடன்பட்டோர் (தற்காலிக நிவாரண) அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். அண்மையில் ஏற்பட்ட வறட்சியை ஒட்டி இந்த அவசரச் சட்டம் 1975ஆம் ஆண்டு சனவரியில் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் உரிமை வழக்குத் தொடர்ந்தோம். ஏனைய சட்ட நடவடிக்கை களில் ஈடுபட்டோ கடனை வசூலிப்பதாக
ஓராண்டுக் காலத்திற்குக் கூடாது என்று ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டது.
கூட்டுறவுச் சங்கத்திற்கும் அரசுக்கும் தரவேண்டிய கடனைக்கூட- இதிலே அவைகள் வராது என்றாலும் கூட, அதனுடைய வசூலை ஓராண்டுக் காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டுமென்று இந்த அரசு கேட்டுக்கொள்ளப்பட்டு, அந்த வசதியும் கிராமப்புற மக்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டதை மன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது. 1975ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சட்டத்தின்படி உழவர்கள் அல்லாத ஏனைய கடன்பட்டவர்களுக்கும், கடன் சுமையிலிருந்து நிவாரணம் பெறலாம் என்ற நிலையில் 1976ஆம் வருஷம் சனவரி 15ஆம் தேதி வரையில் வட்டி எதுவும் வசூலிக்கக்கூடாது என்றும், இந்தச் சட்டம் துயர் தணிப்பு அளிக்கிறது. சிலபேர் இதனை அறவே ரத்து செய்ய வேண்டுமென்று எல்லாம் சொன்னார்கள். இங்கே நண்பர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இந்தச் சட்டத்தைப் பற்றி இங்கே மசோதா வந்த நேரத்தில் குறிப்பிட்டதை நாம் அவ்வளவு சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது. கடன்களை அறவே ரத்து செய்வது என்ற அவ்வளவு முற்போக்கான நிலைமைக்கு நாம் சென்றால், பிறகு கடன் கொடுப்பவர்களே இருக்க மாட்டார்கள். அப்படிக் கடன் கொடுப்பவர்களே இல்லாத நேரத்தில், கடன் கொடுக்கும் வசதிகளை கிராமப்புற மக்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் இல்லாமல்