உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வற்றுக்கு இன்றியமையாப் பொருள்கள் கட்டுப்பாடு விலை யில் வழங்கப்படும்” இது பிரதமர் அவர்களுடைய 13-வது அம்சத் திட்டம்.

தமிழ்நாட்டில் ஹரிஜனங்கள், மற்றும் பழங்குடி வகுப் பைச் சார்ந்த மாணவர்களுக்காக உள்ள இல்லங்கள், விடுதிகள் அதில் படிக்கும் மாணவர்களின் எணணிக்கை 35,752. பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்காக உள்ள இல்லங்கள், அதில் பயிலும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 16,332.

இந்த இல்லங்களில் அவர்களுக்கு வேண்டிய இன்றி யமையாத பொருள்கள், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்ப ரேஷன் மூலம் கட்டுப்பாட்டு விலைக்குத்தான் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இதை நாம் பல்லாண்டுக் காலமாகச் செய்து வருகிறோம். ஆகவே, இந்தத் திட்டம் புதிது அல்ல. ஆகவே, அதை ஒன்றும் நாம் நிறைவேற்ற மறுக்கவில்லை. அதைச் செய்து வருகிறோம் என்பதைத்தான் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

“பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நியாய விலையில் நல்ல நூல்கள், எழுதுபொருள்கள் வழங்குதல், விலைகள் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்படுதல், புத்தக வங்கிகள் அமைத்தல்” இது 14வது அம்சத் திட்டம்.

திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள்கூட புத்தக வங்கிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுப் புத்தகங்கள் வெளியிடுவது நாட்டுடைமையாக்கப்பட்டு இருப்பதை, அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்கள். அப்படிப் பாராட்டியதோடு விலைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன, அது குறைக்கப்பட வேண்டும் என்று சொன்னார். ஆகவே அதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

இந்த இருபது அம்சத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை தனியார் துறையில் அல்லாமல் அரசாங்கத் துறையிலேயே ஒரு நூல் வெளியீட்டகம் வைத்து, அதன் மூலமாக வழங்க வேண்டுமென்று, பாட புத்தக நிறுவனத்தை அமைத்திருக்கிறதா