கலைஞரின் சட்டமன்ற உரைகள்
397
வகையில் - பதினான்கு பயங்கரமான பிரிவுகள் கீழ் எங்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன. இதற்கு இடையிலே தீனன், பாபு மற்றும் ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற தோழர்கள் பிணமானார்கள், துப்பாக்கி பிரயோகத்தில் என்ற செய்தி கிடைக்கின்றது. இன்னும்கூட அதிகப்பேர் செத்தார்கள் என்ற கருத்து நிலவினாலும் கூட, போலீஸ் கமிஷனர் அவர்கள் சொல்லுகின்றார்கள், பிரேதக்கிடங்கிலே உள்ள பிணங்கள் எல்லாம் துப்பாக்கி பிரயோகத்திலே இறந்தவர்களுடைய பிணங்கள் இல்லை. அவைகள் மின்சார இரயில் விபத்தில் இறந்தவர்களுடைய பிணங்கள்தான்' என்று அறிவிக்கின்றார்கள். அப்படி மின்சார இரயில் வண்டிகளிலே அரைபட்டு மாண்டார்கள் என்ற செய்தி அன்றோ மறுநாளோ வந்தனவா என்றால் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. ஆனால் அந்தப் பிணங்கள்தான் அவை என்று பத்து நாட்களுக்குப் பிறகு போலீஸ் கமிஷனர் அறிவித்து விடுகின்றார்.
எவ்வளவு பிணங்களானாலும் இருக்கட்டும், துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது, துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினீர்கள். தடை உத்திரவினைப் போட்டீர்கள். எங்கள் மீது 307 செக்ஷன் செக்ஷன் உள்ளிட்ட பதினான்கு பயங்கரமான செக்ஷன்களைப் போட்டீர்களே, எதற்காக? இந்திரா காந்தி அவர்களுக்குக் கருப்புக்கொடி காட்டியமைக்காக.
ஆனால் என் மீது, பேராசிரியர் மீது, ப.உ.சண்முகம் மீது, மற்றும் உள்ள தலைமைக்கழகச் செயலாளர்கள், உறுப்பினர்கள் 20, 25 பேர் மீது அப்படிப்பட்ட செக்ஷன்கள் கீழ் வழக்குகள் போடப்பட்டு, தமிழகத்திலே பலபகுதிகளிலே நூற்றுக்கணக்கான கழகத்தினர் மீது 307 வது பிரிவின்கீழ் வழக்கு போடப்பட்டு பெரியதொரு அடக்குமுறை இங்கே தாண்டவம் ஆடிற்று.
சென்னையில் இருக்கின்ற நிதியமைச்சர் மனோகரன் அவர்கள் ஒரு அறிக்கை விடுகிறார். மதுரை, திருச்சி, காஞ்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பங்களைக் குறித்த நீதி விசாரணை நடைபெறும் முதலமைச்சர் எனக்குச் சொன்னார் நான் சொல்கிறேன். அவரோடு கலந்து பேசிச்
-