உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

401

ஏக்கமே அடிக்கடி நமது முதல் அமைச்சர் அவர்களைச் சந்திக்க முடியவில்லையே என்பதுதான். ஆனால் அன்று நிருபர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் மறுநாளே அவர்களைச் சந்தித்து முதல் அமைச்சர் அவர்கள் சொல்கிறார்கள். சர்க்காரியா கமிஷன் அறிக்கை பற்றி விசாரிக்கச்சொல்லி மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு ஏழு குற்றச்சாட்டுக்களைப்பற்றி விவரங்கள் வந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.

நான் கேட்கிறேன். அப்போதுதான் வந்ததா? இந்திரா காந்தியின் ஆட்சி இருந்தபோதே பாராளுமன்றத்தில் அதுபற்றிச் சொல்லியிருக்கிறார்கள். சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் எட்டு குற்றச்சாட்டுக்கள் பற்றி அறிக்கை தரப்பட்டிருக்கிறது. அந்த எட்டில் ஒன்று பூச்சி மருந்து தெளித்ததுபற்றியது மத்திய அரசு அதில் நடவடிக்கை எடுக்கும், மிச்சமுள்ள ஏழு குற்றச் சாட்டுக்கள் பற்றி மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறோம் என்று இந்த அரசு உதயமாவதற்கு முன்பே கவர்னர் ஆட்சி நடைபெற்ற போதே பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி சார்பில் அன்றே அந்த ஆட்சியாளர்கள் எடுத்துச் சொல்லிவிட்டார்கள். அப்போது வந்த ஒரு அறிக்கையை ஏதோ இப்போது வந்ததாகச் சொல்லி நடவடிக்கைகள் எடுக்கப்போகிறோம் என்று அவர்கள் சொல்லி தொடர்ந்து அமைச்சர்கள் எல்லாம் கருணாநிதி விடுதலையாகி விட்டார் என்று நினைக்காதீர்கள், கருணாநிதி விடுதலையாகி விட்டது உண்மை. ஆனால் பல வழக்குகளில் சிக்கப்போகிறார். அடுக்கடுக்காக அந்த வழக்குகளைப் போடப்போகிறோம். தொடர் வழக்குகள் போடப்போகிறோம் என்றெல்லாம் அமைச்சர்கள் பேசினார்கள்.

அமைச்சர்கள் எங்களைச் சிறையில் போட்டுவிட்டு என்னென்ன பேசினார்கள்? என் அருமைத் தம்பி, இந்த அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பவர். காளிமுத்து அவர்கள் சிறைச்சாலையில் இருக்கிற கிரிமினல் குற்றவாளி களைவிட கருணாநிதி எந்த வகையில் உயர்ந்தவர் என்றெல்லாம் கேட்டார்கள். நான் மகிழ்ச்சியடைந்தேன். தம்பிக்கு இவ்வளவு வீரம் வந்திருக்கிறதே என்று நான் மகிழ்ச்சியடைந்தேன். அப்படிச் சொன்னால்தான் அந்த இடத்தில் இருக்க

14-க.ச.உ.(அ.தீ.) பா-2