கலைஞரின் சட்டமன்ற உரைகள்
471
போராட்டத்திலே ஒரு சுமுகமான முடிவு எடுக்கப்படுகிறது. நண்பர் திரு.உமாநாத் அவர்கள்கூட அன்றைக்குச் சுட்டிக் காட்டினார்கள். அந்தச் சுமூகமான முடிவு எடுக்கப்படுகிற நேரத்தில் அங்கே இருக்கின்ற அந்த மண்டலப் போலீஸ் அதிகாரி, ஒரு படையோடு அந்த நிறுவனத்தின் உள்ளேயே சென்று, அங்கே இருக்கின்ற தொழிலாளர்களை அடித்து வதைத்துச் சித்திரவதை செய்கிறார். அவ்வளவு கடுமையாக அங்கே நடைபெறுகின்றன.
ஆவடித் தொழிற்சாலையிலே நடைபெறுகிற அல்லல் களை எடுத்துக்காட்ட அமைதியான முறையிலே ஊர்வலம் சென்றபோது ஊர்வலத்திலே கலந்துகொள்வதற்கு முன்பாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்களாகிய திரு.சுப்பு அவர்களும் திரு. கோபு அவர்களும் தி.ரவைக்கண்ணன் அவர்களும் மற்றுமுள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் ஆக நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைக்குக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அங்கே முதலாளிகளுக்குப் பாதுகாப்புத் தரப்படுகிறது. ஆளும் கட்சியினர் தொழிலாளர் களுடைய போராட்டங்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப் படுகிறார்கள். இவைளை எல்லாம் பார்க்கிற நேரத்திலேதான் இங்கே தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசு செயல் படுகிறது என்பதற்கான நூற்றுக்கணக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி கண்டனத் தீர்மானத்தை நம்முடைய நண்பர் அவர்கள் கொண்டுவந்து, அதிலே பேசி இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுகிறது என்பதைக் காட்டுவதற்காகவும், அதே நேரத்திலே முதலாளிகள் தங்களுடைய பிடிவாதத்திலேயிருந்து இறங்கிவரவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவும் தொழிலாளர் களுடைய சங்கத்தின் தலைவர்கள், அரசியல் கட்சியினுடைய தலைவர்களை அணுகி எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் இதனை அரசுக்கு உணர்த்துகிற வகையில் கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம் என்ற அறிவிப்பை அனைத்துக் கட்சிகளின் சார்பிலே வெளியிட்ட நேரத்தில், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சரவர்கள் வானொலியில் பேசிய பேச்சும், அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்,