476
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
மற்றவர்களும் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள், தூண்டிவிட்டார்கள், என்கின்ற அளவுக்கு எங்கள் மீது 307, 302, 120 பி இப்படி எல்லாவித சட்டப்பிரிவுகளும் எங்கள் மீது தூவப்பட்டிருக்கின்றன; வழக்குகளும் தொடரப்பட்டிருக் கின்றன. ஆனால் இதே நிலைமையில் ஏன் மூப்பனாரை சதிக் குற்றத்தில் ஈடுபடுத்தவில்லை என்று நான் கேட்க மாட்டேன். ஏன் நண்பர் மாரிமுத்துவை இப்படிப்பட்ட குற்றத்திலே ஈடு படுத்தவில்லை என்று நான் கேட்க மாட்டேன். நான் கேட்பது எல்லாம் ஒரு கட்சிக்கு ஒரு முறை என்று வைத்துக் கொண் டிருக்கிறீர்களே ஏன்? நாகர்கோவிலில் நடைபெற்ற சம்பவத் திற்கு யார் பொறுப்பு என்பதைப் பார்த்து அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அதுபோல மதுரையில் நடைபெற்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பாளி என்று கருதுகிறீர்களோ அவர்கள் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கும் நடை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நாங்கள் முன்பே அறிவித்து 144 இருக்கின்ற காரணத்தால் நாங்கள் 144 தடை உத்தரவை மீறி இந்திரா காந்தி அம்மையார் வருகின்ற வழியிலே கறுப்புக்கொடி காட்டப் போகின்றோம் என்று அறிவித்துவிட்டு முதல்நாள் கூட்டத்திலும் இதைப்பற்றி விரிவாக அறிவித்துவிட்டு நானும் பேசினேன்; இன்றைக்கு அந்த வழக்கிலே யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் பேசிவிட்டு முதலில் நாங்கள் கறுப்புக்கொடியை எடுத்துக்கொண்டு செல்கிறோம். ஆனால் நாங்கள் சதி வழக்கில் ஈடுபட்டோம் என்று வழக்குப் போடுகிறார்கள். அதை வாபஸ் வாங்குங்கள். நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று பேரம் பேசிக் கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை.
அந்த வழக்கு என்னவாகும் என்று முதலமைச்சர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். மற்ற அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் கருணாநிதி தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்று பேசுகிறார்கள். அதைப்பற்றி கவலை யில்லை. என்ன வந்துவிடும்? என்ன தூக்குத் தண்டனையா வந்துவிடும்? அதைவிடப் பெரிய தண்டனை உலகத்தில் கிடையாது. அந்தத் தண்டனை கொடுக்க உங்களுக்கு இஷ்ட