உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பேரறிஞர் அண்ணா அவர்களிடத்திலே, மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கொண்டிருந்த தொடர்பு பாராட்டத்தக்கதாய், போற்றத்தக்கதாய், அனைவரும் சிலாகித்துப் பேசத்தக்கதாய் அமைந்திருந்தது. அந்தக் காரணத்தினால்தானோ என்னவோ, அண்ணா அவர்களின் நினைவு நாளைக் கொண்டாடக்கூடிய இந்த நாளில் இந்த மன்றத்திலே இராஜாஜி அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிகழ்ச்சியும் இணைந்திருக்கிறதோ என்று நாம் எண்ணிட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பொருத்தமான அளவில், மனம் விட்டுப் பேசக்கூடிய அரசியல் பெருந்தகையாளராய் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் விளங்கினார்கள்.

அவர்களுடைய பொதுவாழ்க்கையிலே ஏற்பட்ட எத்தனையோ கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் எப்படிச் சமாளித்தார்கள் என்பதை இங்கே இரங்கல் தீர்மானத்திலே பேசியவர்கள் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பதிலே இராஜாஜி அவர்கள் வல்லவர் என்பதற்கு அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்திலே எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஈகை, இரக்கம்

பல

இவைகளைக் காட்டும் நேரத்திலேயும் கூடச் சற்று ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டுத்தான் ஈடுபட்டுத்தான் அதை அவர்கள் காட்டுவார்கள் என்பதற்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் ஒருநாள் திடீரென்று பாலக்காட்டிலிருந்து ஒரு குடும்பத்தினர் அவருடைய இல்லத்திற்கு வந்தார்கள். அவர் வழக்கறிஞர் பணிக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்கள் குறுக்கிட்டு "நாங்கள் பாலக்கட்டிற்குச் செல்ல வேண்டும். திடீரென்று கையிலிருந்த பணம் பறிபோய்விட்டது. பாலக்காட்டிலே நான் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எங்கள் குடும்பத்தினர் பாலக்காட்டிற்குச் செல்ல புகைவண்டிக்கான டிக்கெட் எடுப்பதற்குப் பணம் தேவை” என்று கேட்டார்களாம். உடனடியாக வழக்கறிஞர் இராஜாஜி அவர்கள், “மாலையில்தான் உங்களுக்கு இரயில். அதுவரையில் வீட்டிலே சாப்பிட்டு இருக்கலாம்” என்று கூற அவர்களும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். அவர்களை இல்லத்திலே அமர வைத்துவிட்டு, கோர்ட்டுக்குச் செல்ல வேண்டிய இராஜாஜி அவர்கள், கோர்ட்டிற்குச் செல்லாமல்