92
காவல்துறை பற்றி
தங்களுடைய குறைகளை எடுத்துச்சொல்லி வருகிறார்கள். போலீஸ் குழு ஓர் அறிக்கை அனுப்பி இருக்கிறது. எல்லாப் போலீஸ்காரர்களும் எந்த ஸ்டேஷனில் இருந்தாலும் தங்களுடைய குறைகளைச் சொல்லலாம், சொல்லவேண்டும். போலீஸ் குழுவின் சார்பாக அனைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. (திரு. ம. பொ. சிவஞானத்தைப் பார்த்து) சரிதானே ?
திரு. ம. பொ. சிவஞானம் : பேரவைத் தலைவர் அவர்களே, போலீஸ்காரர்களுக்குச் சங்கம் இல்லை என்பதை அறிந்துதான் கமிஷன் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக ஒவ்வொரு போலீஸ்காரருடைய குறைகளையும் விசாரித்து அனுப்புவதோடு அல்லாமல், கூட்டம் போட்டு சேர்த்து அனுப்பினாலும் பெற்று அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு போலீஸ் ஐ.ஜி. மற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ஆகவேதான் சங்கங்கள் வைத்து காரியங்கள் செய்ய வேண்டியது என்பதல்லாமல், அதைப்பற்றி ஹேஷ்யம் கூறுவதைவிட கமிஷனுடைய குரலை கொடுக்கின்ற வகையில் சிலம்புச் செல்வர் விளக்கத்தைக் கொடுத்ததைக் கேட்டீர்கள். அந்தக் குழுவின் மூலம் கிடைக்கும் அறிக்கையின்மீது விரிவான முடிவு எடுக்கப்படும். குழுவை ஆராயும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள விவரங்கள்: காவல் படையினரின் சம்பளம், படிகள் பற்றி ஒரு இசைவான முடிவு எடுப்பதற்காக காவல்துறை ஆணைக் குழுவும் சம்பள ஆணைக் குழுவும் சேர்ந்து இது குறித்து பரிசீலனை செய்யும், பணியின் பொது நிலைமைகள், வீட்டு வசதி, காவலர் நலன், காவல் படையின் அதிகாரங்கள், கடமைகள் சட்டம், ஒழுங்கு இவற்றை நிலைநிறுத்துதல், குற்றத்தைத் தடுத்தல், புலனாய்வு செய்தல், போக்குவரத்து கட்டுப்படுத்துதலும், முறைப்படுத்துதலும், வேவுத் தகவல் சேகரித்தல், காவலர்கள் பிற கடமைகள் பழையனவும், புதியனவும் ஆகியவற்றிற்குத் தொடர்பானவற்றில் காவல் படையின் செயல் திறனை மேம்படுத்துதல், மற்றும் இதுபோன்ற பல்வேறு தகவல்கள், இன்னும் காவல்துறை யினருக்குச் செய்யவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி இந்தக் குழு ஆராய இருக்கிறது.