உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

171

கிடைத்திருக்காது. ஆகவே, அவ்வளவு அழுத்தந்திருத்தமாக வார்த்தைகள் போட்டுச் சொன்னார். (சிரிப்பு). நான் கேட்கிறேன் அதை அப்படியே மாற்றலாம். இந்தப் போராட்டத்திற்கு எல்லாம் காரணமாக இருந்தவர்கள் தூண்டிவிட்டவர்கள்தான். அந்த 10 பேர் செத்ததற்கும் இவர்கள்தான் மறைமுகமாகக் காரணமாக இருந்தார்கள் என்று நான் கூற முடியாதா? (கரவொலி). ஏனென்றால் போராட்டத்திற்கான கோரிக்கைகளை நாம் ஆராய வேண்டும்.

விவசாயப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 1968-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை என்ன? எங்களுடைய நாட்டிற்கு இந்தி ஆதிக்கம் கூடாது. எங்கள் மொழிக்கு ஆபத்து வரக்கூடாது. தமிழைத் தாழ்த்திட இன்னொரு மொழிக்கு நாங்கள் இடந்தரமாட்டோம் என்று சூளுரைத்து இந்த நாட்டு இளைஞர் சமுதாயம், மாணவ சமுதாயம், கிளர்ந்தெழுந்தது. அவர்களுக்கு அனுசரணையாகத் தமிழ் சமுதாயமே கிளர்ந்து எழுந்து நின்றது. 1965-ம் ஆண்டிலே இந்தி எதிர்ப்புப் புரட்சியே நடைபெற்றது. அப்போது ஒரு வார்த்தை மத்திய அரசு "இந்தியை நாங்கள் கட்டாயமாகப் புகுத்த மாட்டோம், உங்களுடைய எண்ணத்தை மதிக்கிறோம்” என்று சொல்லியிருந்தால் 53 பேர் அந்தப் போராட்டத்திலே பிணமாகத் தேவையில்லை. ஆனால் விவசாயப் போராட்டத்தின் நிலைமை என்ன? நாம் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைச் சொன்னார்கள். இன்னும் சொல்லப்போனால் விவசாய வருமான வரியை அதிகப்படுத்தியதற்கு ஆதரவு தெரிவித்து, அதை எங்களுடைய கட்சி ஆதரிக்கிறது என்றுகூறி, இங்கே அதற்கு வாக்களித்து நிறைவேற்றுவதற்குக் காரணமாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயப் போராட்டத்தின் பின்னால் நின்றது. ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து, பிரதமராக இருக்கின்ற மதிப்பிற்குரிய இந்திரா காந்தி அவர்கள், என்ன சொன்னார்கள், இந்தப் போராட்டத்திற்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அவர்கள் சொன்னார்கள். ஏனென்றால், இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மின்சார டாரிப்ரேட் (Tariff