உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

175

திரு. கே. ஏ. மதியழகன் : தலைவரவர்களே, அ.தி.மு.க என்கிறார்களே, க.தி.மு.க. தலைவர் பேசுகிறார்களா? சட்டமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றிருக்கிறதே தவிர, அ.தி.மு.க. என்றில்லை. இவர் என்ன வெளியில் க.தி.மு.க. தலைவரா என்று கேட்கிறேன். வேண்டுமானால் பேசட்டும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் எங்களுடைய கட்சியை தி.மு.க. என்று சொல்லுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு தி.மு.க. என்று சொல்லுகிறேன். அவர்களைச் சொல்லும்போது அ.தி.மு.க. என்கிறேன். எங்களுடைய கட்சியின் முழுப்பெயரை திராவிட முன்னேற்றக் கழகம் என்று குறிப்பிடும்போது, அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முழுப்பெயரைச் சொல்லுகிறேன். அண்ணா என்ற பெயரைச் சொல்ல எனக்கு என்ன வெட்கம்? அண்ணா அவர்களின் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு. கே. ஏ. மதியழகன் : அண்ணாவின் பெயரைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, அண்ணாவின் பெயரைச் சாப்பிட்டால் பரவாயில்லை. அண்ணா பெயரால் சாப்பிடக் கூடாது.

திரு. கே. ஏ. மதியழகன் : நிரம்ப சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நண்பர் டாக்டர் ஹாண்டே அவர்கள் சொன்னது போல் இதுபோன்ற வன்முறை செயல்கள் மூன்று ஆண்டு காலத்தில் இங்கே 21 அரசியல் கொலைகள்தான். கேரளத்தில் 53 அரசியல் கொலைகள் என்று நான் எடுத்துக்காட்டியதற்குக் காரணம், இந்த வன்முறைகள் எல்லா இடத்திலும். . .

டாக்டர் எச். வி. ஹாண்டே : நீங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சியின் விவரத்தைச் சொல்லுங்கள்.