உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

-

காவல்துறை பற்றி

மற்றும் ஒரு அதிகாரியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று அதிகாரிகளும் சேர்ந்து எல்லா மதுபானத் தொழிற்சாலைகளிடமிருந்தும் விவரங்களைக் கேட்டறிந்து விலை நிர்ணயம் செய்தார்கள். அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் விலையை விடக் குறைந்தது. உதாரணமாக மதுபானத் தொழிற்சாலையினுடைய 'பேலன்ஸ் ஷீட் அதாவது தனியாருடைய மதுபானத் தொழிற்சாலையினுடைய 'பேலன்ஸ் ஷீட்டில்' - இதை எல்லாம் அவர்கள் காட்டமாட்டார்கள். அவர்கள் செய்த மொத்த வியாபாரம் எவ்வளவு அநியாயம் நடக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன் - மொத்த வியாபாரம் ஒரு கம்பெனியில். 23.49 கோடி ரூபாய். இதிலே வேரியபிள் காஸ்ட் என்று சொல்லக்கூடிய செலவினங்களைக் கழிக்கிறார்கள். எவ்வளவு? 14.03 கோடி ரூபாயைக் கழிக்கிறார்கள். அந்த 14.03 கோடி ரூபாய் என்பது சரியா இல்லையா என்பது வேறு விவகாரம். அதைக் கழித்த பிறகு மீதம் உள்ளது 9.46 கோடி ரூபாய். அந்த 9.46 கோடி ரூபாயிலே 'ஓவர் ஹெட்' என்ற செலவினங்களை மீண்டும் கழிக்கிறார்கள். அது 5.08 கோடி ரூபாய். அதற்குப் பிறகு நிகர லாபம் 4.38 கோடி ரூபாய் என்று காட்டுகிறார்கள். அவசரப்பட்டு அப்பாடா என்று பெருமூச்சு விடக் கூடாது. 23 கோடி ரூபாய் டர்ன் ஓவர். அதிலே நிகர லாபம் என்று காட்டுவது 4.38 கோடி ரூபாய். அத்தோடு நிறுத்தவில்லை அவர்கள். நிகர லாபத்தில் சேல்ஸ் ப்ரோ மோஷனுக்காகச் செலவிட்டதாகக் கணக்கு 4.6 கோடி ரூபாய். பாவம் அவர்களுக்கு நஷ்டம் வருகிறது. சேல்ஸ் ப்ரோ மோஷனுக்காகச் செலவிட்டது 4.6 கோடி ரூபாய். சேல்ஸ் ப்ரோ மோஷன் எதற்காக? விளம்பரம் செய்வதற்கு. நீங்கள் மறந்து விடக்கூடாது. உற்பத்தியாளர்கள் தனிக் கம்பெனி. அவர்கள் உற்பத்தி செய்து மொத்தமாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு விற்கிறார்கள். டாஸ்மாக்குக்கு விளம்பரம் செய்து, எங்கள் சரக்கு களை வாங்குங்கள் விளம்பரம் செய்து, எங்கள் சரக்குகளை வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து, 4 கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விளம்பரச் செலவு என்பது 4.6 கோடி ரூபாய்; எங்களுக்குக்