கலைஞரின் சட்டமன்ற உரைகள்
395
வரை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஸ்டே வாங்கி விட்டார்கள். ஸ்டே வாங்கியது மாத்திரமல்ல; அங்கே வாங்கிய அந்த ஸ்டே ஆர்டரை கையிலே வைத்துக் கொண்டு, தமிழ்நாடு மாநில பணியாளர் தீர்ப்பாயம் இருக்கிறதே டி. ஏ. டி. அங்கே சென்று பணிநீக்க உத்தரவை நிறுத்தி வைத்து; அங்கே ஒரு தீர்ப்பு வாங்கிவிட்டார். ஆக, ஒரு இடத்திலே ஸ்டே அதைப்போலவே அந்த மன்றத்திலே அவர்களுடைய பணிநீக்க உத்தரவை நிறுத்தி வைத்து ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது, எனவேதான் நீதி மன்றத்தினுடைய குறுக்கீடு, டி. ஏ. டி. யினுடைய குறுக்கீடு இவைகளின் காரணமாகத்தான் 17-4-1990-ல் அவரை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பதையும், பணிக்கு அமர்த்திவிட்ட காரணத்தால், இடைக்காலத் தடை உத்திரவு தான் அது என்பதைப் புரியாத அரசு அல்ல இது. எனவே ஏற்ற நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படி எடுத்தது என்பதற்கு உதாரணமாக வையம்பட்டி நிகழ்ச்சி உங்களிலே பலருக்குத் தெரியும். வையம்பட்டியிலே போலீஸ் ‘லாக்-அப்'-லே ஒருவர் இறந்து விடுகிறார். அப்படி இறந்துவிட்டதை முதலிலே போலீசார், அங்கு இருந்தவர்கள் மறைக்க விரும்புகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அந்தக் குற்றத்தைக் கண்டுபிடித்து அறிவித்த உடன், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப் பட்டார்கள். அப்படி நடவடிக்கை எடுத்ததில் வையம்பட்டி உதவி ஆய்வாளர் வடிவேலு, மணப்பாறை உதவி ஆய்வாளர் நடராஜன், காவலர் 852 எண்ணுள்ள இராமச்சந்திரன், காவலர் 652 எண்ணுள்ள இராஜகோபால், காவலர் 2197 எண்ணுள்ள நடேசன் ஆகியோர் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அது மாத்திரமல்ல, மேலும் மணப்பாறை ஆய்வாளர் சந்திரன், மாப்பாளை ஆய்வாளர் ஆதீனம் ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டார்கள். அதுவன்றி, ஆய்வாளர்கள் எஸ். ஆர். நடராஜன், எஸ். வடிவேல் மற்றும் காவலர் பி. ஜெபமணி ஆ கியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 'லாக்-ஆப்'-லே ஒருவர் இறந்ததற்காக இப்படி