614
காவல்துறை பற்றி
மறுத்துவிட அதன் காரணமாக, இறந்துவிட்டாரே தவிர, காவலர்கள் மோசமாகப் பேசினார்கள், ஆகவே அவர் தன்னை கொலைக்கு ஆ உள்ளாக்கிக் கொண்டார் என்ற சொல்வது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. இந்த வழக்கிலே காவல் துறையினருக்கு சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
அஞ்சலையின் அண்ணன் கொடுத்த முதல் புகாரில், காவல் துறையினர்மீது எந்தத் தவறும் அஞ்சலையினுடைய அண்ணன் கூறவில்லை. அந்தப் புகார் மனுவில் எந்தத் தவறும் கூறவில்லை. மேலும் இதுகுறித்து ஐயப்பாடுகள் எழுமேயானால் முருகேசன் சம்பவத்திலே குற்றப் புலனாய்வுத் துறை உள்ளூர் காவலர்கள் செய்த விசாரணை முறையாக நடைபெற்றதா என்பதை சரிபார்த்ததைப் போல, விழுப்புரம் நிகழ்வுபற்றியும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஆணையிட்டு சரி பார்க்கச் சொல்கிறேன் என்கிற உறுதியை மாத்திரம் நான் திரு. சுப்பராயன் அவர்களுக்கு இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆ
நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் கே.ஆர். இராமசாமி இங்கே எழுப்பிய, பட்டு குருக்கள் கொலை. அதிலேயும் பல கோணங்களிலே போலீசார் துருவி துருவி ஆராய்கிறார்கள். அதற்கு 3, 4 கோணங்கள் இருக்கின்றன. ஒரு கோணம் காதல் கோணம். ஆகவே காதல் இல்லாத கொலை என்று எதுவும் கிடையாது. (சிரிப்பு). அது அவருக்குத் தெரியும். கே.ஆர். இராமசாமிக்குத் தெரிந்திருக்கும்; தெரியாமல் இல்லை. இருந்தாலும் காதலை மறைத்துவிட்டு, பாக்கி விஷயங்களை மாத்திரம் அவர் இங்கே பேசியிருக்கிறார். புகழேந்தி என்கிறவரும், அவருடைய கூட்டாளிகளும் இந்தக் கொலைக்குக் காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதற்கான நோக்கம் எதுவாக இருக்கும் என்று பல கோணங்களிலும் காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றார்கள். C.B., C.I.D. போலீசும் இதை மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கூடும் என்ற உறுதியை காவல் துறை எனக்கு அளித்துள்ளது என்பதையும் நான் நம்முடைய கே.ஆர். இராமசாமி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.