உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




616

காவல்துறை பற்றி

கள்ளச்சாராயத்தை ஒழிக்கின்ற முயற்சியிலே ஈடுபட வேண்டும். அந்த முயற்சியிலே நாம் இப்போது பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதை ஒத்துக்கொண்டு, எல்லோருடைய ஒத்துழைப்பும் எனக்குத் தேவை என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நேரத்திலே சில அறிவுப்புகளை காவல் துறையின் சார்பாக இந்த மாமன்றத்திலே வெளியிட நான் விரும்புகின்றேன். காவல் துறை இயக்குநர் அலுவலக வளாகம் ஏற்கெனவே நம்முடைய கடற்கரை ஓரத்திலே வானொலி நிலையத்திற்குப் பக்கத்திலே இருந்த காவல் துறை தலைமை அதிகாரியினுடைய அலுவலகத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எல்லாம் நடைபெற்று, அது இடிக்கப்படுகிற நேரத்திலே இந்த ஆட்சி பொறுப்பேற்று அதை இடிக்காமல் தடுத்து, அதே இடத்திலே பழைய கட்டடத்தையே பொலிவுபடுத்தி, வலிவுபடுத்தி, புதுமைக்கோலம் கொள்ளச் செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது அந்தக் கட்டடத்தை ஒட்டினாற்போல், வானொலிப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறை ஆகியவற்றின் கட்டடங்கள் பழுது பார்க்க இயலாத அளவிற்கு உள்ளபடியால் அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை அல்ல அதற்குப் பின்னால் இருக்கின்ற, ஒட்டியிருக்கின்ற சில பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அந்த இடத்திலேயே புதிய கட்டடங்களைக் கட்டுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வல்லுநர் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழுவினுடைய அறிக்கை கிடைத்த வுடன் புதிய கட்டடங்கள், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் அமைந்துள்ள அதே வடிவமைப்பில் கட்டுவதென்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

தற்போதைய வேலூர் சரகம், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய சரகமாக ருக்கிறது. அதை இரண்டாகப் பிரித்து சேலத்தில் ஒரு புதிய காவல் சரகம் ஏற்படுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இந்தச் சரகத்தின்கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் இடம்பெறும். தற்போது விழுப்புரம் சரகத்தில் உள்ள திருவண்ணா மலை மாவட்டமும், வேலூர் மாவட்டமும் வேலூர் சரகத்தின்கீழ் இடம்பெறும்.