கலைஞரின் சட்டமன்ற உரைகள்
677
மட்டும் அல்லாமல் இன்று என்னிடம் கடிதமும் கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி தன்மீது ஒரு தவறான, வேண்டுமென்றே திட்டமிட்டு சாட்டப்பட்ட குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தக்கவரைக் கொண்டு சரியான ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று நான் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
இவற்றுக்கு எல்லாம் முத்தாரம் வைப்பதைப்போல சில அறிவிப்புகளை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.
ம்
அதில் முதல் அறிவிப்பாக நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் ஆறுமுகம் அவர்களும் இந்த அவையிலே ஒரு பரிந்துரையை வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக காணாமல் போய்விட்டது குறித்து இதே அவையிலே பிரச்சினை எழுப்பப் பட்டபோது, அவர்களை கண்டுபிடிப்பதற்கான பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தேன்.
அதன்படி காணாமல் போன அந்த 12 மீனவர்கள் குடும்பங்களுக்கு, அவர்கள் இல்லம் திரும்பும் வரை அல்லது காணாமல் போன மீனவர்கள் குடும்பம் அரசிடம் இருந்து முழு நிவாரண உதவித்தொகை பெறும் வரை மாதந்தோறும் தலா ஒரு குடும்பத்திற்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).
அறிவிப்பு 1 : கடலோரப் பாதுகாப்பிற்கு புதிய பணி
இடங்கள்.
கடலோர பாதுகாப்பிற்காக 12 கடலோர காவல் நிலையங்கள், 12 புறநகர் காவல் நிலையங்கள் மற்றும் 40 சோதனைச் சாவடிகள் ஆகியவற்றுக்கு கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான செலவில் 50 சதவீதம் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். அனைத்துக் கட்டிடங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். இந்த நிலையங்களில்