உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வள்ளுவர் பேசும் கலை வளர்ப்போம் கூறியது பொருத்தமாகிவிடும். நிரம்பிய நூலின்றி அவைக்களம் புகுதல் கூடாது என்று திருக்குறள் திட்டவட்டமாகக் கூறுகிறது. ய கருத்தரங்குகளில் மட்டுமே கூறவேண்டிய கருத்துக் களை, அந்த அரங்குகளை விட்டுப் பாமர மக்களிடமும் மெல்ல மெல்லக் கொண்டு மெல்லவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்திவிட்டு, அதனைத் தான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்கு துணையாக இணைப்பது, பாலில் தேன் கலப்பது போல இருக்க வேண்டும். ய "ஏழை எளியோர் தொழிலாளர் ஆகிய இயலாதோர் வர்க்கத்தைக் கசக்கிப் பிழிந்த ஜார் மன்னனின் கதி என்ன வாயிற்று? சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடி னான்? உலகப் பெரும் போரில் இட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் தாக்குதலில் இருந்து இங்கி லாந்தைக் காத்திட்ட சர்ச்சில், அடுத்து வந்த தேர்தலில் பிரதமராக முடியாமல் அவரது கட்சி தோற்கடிக்கப் பட்டது-” இப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர் சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற் றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக்கூட்டப் பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெற முடியாது. அதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக்கூடிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக் கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின் பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்த தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமை யன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.