உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதையல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதையல் 201 தண்டை வைத்து அடுப்பெரிக்கும் கட்டத்தில் அன்று பெரிய தமாஷ் நடந்தது. வழக்கமாக, வாழைத் தண்டை மண்ணெண்ணையில் நனைத்து வந்து வைத்திருப்பார்கள். நெருப்புப் பட்டதும், அது எரியும். ஜனங்களும் கை தட்டு வார்கள். அன்றைக்கு எண்ணெய் ஊற்றிவைக்க மறந்து விட்டார்கள் போலும். நல்லதங்காள், "நான் பத்தினி யானால் வாழைத் தண்டு எரியட்டும்! ’7 " போலக் கத்தியும், கதறியும் பயனில்லை! விஷயம் என்று காளி - விளங்கி விட்டது நல்லதங்காளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை எனக்கு! உள்ளே ஓடி வந்தேன். மண் எண்ணையை ஒரு கண்ணாடிக் குவளை யில் ஊற்றி எடுத்துக் கொண்டு, மேடைக்கு வந்தேன். இதுபோலப் பேசினேன்: 66 அஷ்டதிக்குப் பாலகர்களே! இதுவரையிலே இந்த நல்லதங்காள் வெறும் வாழைத் தண்டை மட்டுமே எரித் தாள். இப்போ இவள் அசல் பத்தினி என்பதைக் காட்டு வதற்காக, இதோ கொஞ்சம் தண்ணீரையும் அடுப்பிலே ஊற்றி, வாழைத் தண்டைப் பற்ற வைக்கிறேன் என்று புதிய வசனம் பேசிவிட்டு, எண்ணையை அடுப்பிலே ஊற்றி, நெருப்பு வைத்தேன். என்றைக்கும் விட அன்றைக்கு அந்த சீன் பலே ஜோர்!-பிரமாதமான கரகோஷம்! அரிச்சந்திரா நாடகத்திலே நான் லோகிதாசன் வேஷம் போடுவதுண்டு. லோகிதாசன் நாடக மேடையில் பாம்பு கடித்து இறக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும். சந்திரமதியின் புலம்பலும் மிகக் கவர்ச்சியாக இருக்கும், மக்களுக்கு! - லோகிதாசனாகிய நான், பாம்பு கடித்து இறந்து கிடக்கிறேன். என்னை சந்திரமதி மயானத்தில் கொண்டுபோய்க் கிடத்தியிருக்கிறாள். அரிச்சந்திரன், ~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதையல்.pdf/203&oldid=1719468" இலிருந்து மீள்விக்கப்பட்டது