உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 புதுமைப்பித்தன் கதைகள் மருதியின் தேவைகள் ஒன்றும் ஜாஸ்தியாகிவிட வில்லை. அதனால் அவளுக்கு அந்த நான்கணாவில் சிறிது மிச்சமும் விழுந்தது. ஆனால், குழந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை நாளுக்குநாள் வளர ஆரம்பித்தது. எப்படிப் போய்ப் பார்ப்பது? அதிலும் வெள்ளையனுக்குத் தெரியாமல்... "குழந்தை. குழந்தை- இதுதான் சதா காலத் தியானமும். ரிஜிஸ்திரார் பக்கத்தூருக்குப் போகவேண்டி யிருந்த தால், இரண்டு மூன்று நாட்களுக்குப் புல் வெட்டும் தொழி லில் சிறிது ஓய்வு. ஏன் வாசவன்பட்டிக்குப் போய் விட்டு வரக்கூடாது? அவள் கொழும்பிலிருந்து வெள்ளைச்சிக்கு வாங்கி வந்த ஒரு ஜோடிக் கண்ணாடி வளையல்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். புறப்படும் வரையில் வெள்ளைச்சியை எப்படிச் சந்திப் பது என்ற பிரச்னை எழவில்லை. வழியிலெல்லாம் அதே கேள்விதான். குழந்தையை எப்படிச் சந்திப்பது? ஊரைத் தாண்டியதும், மருதி மூட்டையை இடுக்கிக் கொண்டு, வெகு வேகமாக நடந்தாள். ஒவ்வொரு நிமிஷ மும் வெள்ளைச்சியின் உயரம், பேச்சு இவையெல்லாம் எப்படி யிருக்கும் என்ற மனக் கனவு. IX மருதி வாசவன்பட்டிக்குள் செல்லும்பொழுது, பகல் 11 மணியிருக்கும். அவளும் ஊரைச் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டமில்லாத பாதையின் வழியாகவே சென்றாள். நல்ல காலம், தெரிந்தவர்கள் ஒருவராவது எதிரில் வரவில்லை. வெள்ளையனின் வீடு வந்துவிட்டது. சேரியில் பறை யர்கள் நடமாட்டம் அதிகமில்லை. பகலில் வீட்டில்,