உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


________________

10 என்று சொல்வதற்காக யாரும் குறை படமுடியாது. நாட்டு விடுதலையிலும் சமூகச் சமத்துவத்திலும் ஆர்வம் கொண்ட தேசியக்கவி பாரதியார், 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே" என்று பாடியுள்ளார். அந்தச் சொல்லுக்கு ஒரு கண்டனப் பொருள் இருக்குமானால், அந்தப் பொருளில், வெறுப்பில் அந்தச் சொல்லைப் பயன்படுத்திய நிலையிலிருந்து இன்று மாறியிருக்கிறது. இருந்தாலுங் கூட நான் ஓர் அடிப்படை உண்மையைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தச்சொல் ஒரு கொள்கைச் சார்பைத்தான் இன்று குறிக்கின்றது. திராவிடர் இயக்கத்தைப் பற்றிப் பேசுகிற ஒருவர் ஒருவேளை ஆரியராகக்கூட இருக்கலாம். அதை எதிர்த்துப் பேசுகிற சிலர் திராவிடராகவேகூட இருக்கலாம். தனி மனிதனுடைய இனத்தைத் தீர்மானிக்கும் சொல்லாகவே இந்த 'ஆரியர்', 'திராவிடர்’ பெயர்களை நாம் கருதத் தேவையில்லை. ஆனால், தொன்மையான இரண்டு பெரிய, தனித்தனிக் கலாச்சாரங்களுடைய பெயர்களாக அமைந்திருப்பவை அவை. கலாச்சாரம், என்பது மொழி, பண்பாடு, கலை, நாகரிகம் அதற்குப் பின்புலமாகக் காணப்படுகிற ஒரு தனி வரலாறு ஆகியவற்றைச் சுட்டுபவை அப்பெயர்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் அதன் காரணத்தைக் குறிப்பிடுவதற்குத் திராவிடர், ஆரியர் என்னும் இனப் பெயர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையாகவே இந்தக் கருத்துக்களை, ஒரு கட்சியைச் சார்ந்தவன் என்னும் முறையில் பேசினால் இந்தக் கருத்தரங்கம் சிறக்காது என்ற காரணத்தால், நான் சில எண்ணப் போக்குகளை மட்டுமே சில சான்றுகளைக் கொண்டு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.