உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


________________

25 இடும் இறைச்சியுடனோ, ஊனுடனோ வழங்கும் சுரா பானத்தையும் ஏற்கும் என்றும் நம்பி யாகம் செய்தனர். விரைவாகவே அக்கினி ஓமம் உயிர்ப்பலி யாகம் ஆகியவைகட்குப் பதிலாக, உருவ வழிபாட்டுப் பூசை செய்யும் முறைகள் இடம் பெற்றன. திராவிடச் சமய நெறியின் சிறப்பு வாய்ந்த இறை உருவ வழிபாடு - ஆரியர்களால் ஏற்கப்பட்டது. புலால் உண்ணாமையும் எவ்வுயிர்க்கும் கேடு செய்யாத கொள்கையும் வளரலாயின. வேதம் போற்றும் வைதிக மரபு (திராவிட) ஆகம முறையின் செல்வாக்கிற்கு ஆட்பட்டதால், இன்றைய இந்துப் பண்பாட்டில் ஆகமத்தின் செல்வாக்கு - வேதத்தின் செல்வாக்குக்கு இணையாகவே இருக்கிறது. - இந்துச் சமயத்தில் ஆரிய திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றன் பக்கம் ஒன்றாகத் தனித்தனியாக இல்லை. உயர்ந்த நாகரிகம் வாய்ந்த திராவிடர்களுடன் ஏற்பட்ட தொடர்பில், வேத மதம் கடவுள் நம்பிக்கை மதமாக மாற்ற மடைந்துள்ளது. வேத அடிப்படையில் கடவுள் கோட்பாடு கொள்ளாத ஆரியம் திராவிடத் தொடர்பால் ஒரு கடவுள் கோட்பாட்டைத் தழுவியதாக மருவியது. மொஹஞ்சதாரோ, அரப்பாவிலே வாழ்ந்தவர்களைப் போன்றதொரு நாகரிக வளர்ச்சியோடும் ஒரு தத்துவச் சிந்தனையோடும் வாழ்ந்த திராவிடர்களோடு ஏற்பட்ட உறவு காரணமாகத்தான் ஆரியர்களிடம் அந்த மாற்றம் விளைந்தது என்று டாக்டர் இராதாகிருட்டிணன் சொல்கிறார். திராவிட நாகரிகமே இந்துமதம் தத்துவ முறையில் கடவுள் ஒன்றெனப் போற்றுகிற சமயமாக, மாறுவதற்கு வழிவகுத்தது என்று கூறுகிறார். வேதங்களிலிருந்து அறியப்படும் முறையில் ஒவ்வொரு காலகட்டத்தில் 3 தி.இ.405