உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சொர்க்கவாசல். திலகா : அம்மா! அம்மா!இரு..இரு... அம்மாவிடம் சொல்லி அம்மா இங்கே வந்து [மதிவாணன் திலகாவின் குரல்போல் தன் குரலை மாற்றிக் கொண்டு.) . மதி: இங்கே வந்து, திலகா பாடுவதைக் கேளம்மா! வீரம் குடி கொண்ட முகம்! நல்ல வெற்றிக்களை வீசும் கண் கள். . 4 [மதிவாணன் பாட, திலகா கோபிப்பது போலாகி ஒரு கொய்யாக் கனியை எடுத்து மதிவாணன் மீது வீச, அவன் கனி தன் மீது விழவிடாதபடி குனிந்து கொள்ள, எதிரே வந்து கொண்டிருக்கும் முத்து கரத்தருகே கனி வருகிறது.அவன் அதைப் பந்து பிடிப்பது போல் பிடித்துக் கொள்ளுகி றான். முத்து எதிர்பாராதவிதமாக அங்கு வந் த்து கண்டு திலகா வெட்க மேலிட்டு வேறோர் புறம் ஓடிவிடுகிறாள். மதி திரும்பிப் பார்த்து முத்துவைக் கண்டு புன்னகையுடன் வரவேற்கி றான்.] மதி: முத்துமாணிக்கம்! முத்து: (ஏட்டை நீட்டியபடி) கவிராயர் இதைக் கொடுத்தார். மதி: இதே ஏட்டிலே உள்ள இரண்டு அடிகளைப் பற்றித்தான் இங்கே பலத்த விவாதம். முத்து: (தழதழத்த குரலில்)கேட்டுக்கொண்டுதானிருந் தேன், நண்பா! நான் பாக்யசாலி, உன் சம்மதம் கிடைத் தால். மதி (முத்துலின் கரங்களைப் பிடித்தபடி) உன் பெருங்குணம் கண்டு மகிழ்கிறேன் முத்து! என் தங்கை திலகாவின்