உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 31 சோம: (தடியை ஓங்கியபடி)போக்கிரிப் பயலே! என் னிடமா துடுக்குத் தனம்?. மதி: ஏ,காட்டுக் குணம் படைத்த கிழவா? கழுத்தைப் பிடித்துத் தள்ளுமுன், நீயாக ஓடிப்போ...போ.! என்று மிரட்ட, கற்பகத்தம்மாள் பயத்தால் கைகளைப் பிசைந்து கொள்கிறார்கள். தீப் பொறி பறக்கும் கண்களுடன் நிற்கிறான் மதி வாணன்.] சோம: படுகொலை செய்து, பகற்கொள்ளை அடித்து பணம் சேர்க்கிறவனைக்கூட மனுஷன்னு சொல்லலாம்டா! சீமான் வீட்டுப் பிள்ளையைச் சொக்குப்பொடி போட்டுப் பிடிக்கத் தங்கையை ஏவும் வெட்கங் கெட்ட வேலையைச் செய்பவனை மனுஷ ஜாதியிலே எவனாவது சேர்ப்பானா? [கோப மிகுதியால், மதிவாணன் ஓங்கி சோம . நாதர் கன்னத்தில் அறைந்து விடுகிறான். சோம் நாதர் கூச்சலிடுகிறார். தன் ஆட்களை அழைக் கிறார். அவர் கூச்சலையும் மிஞ்சும்படியான குர லில் பேசுகிறான் மதிவாணன்...] மதி: பணத்தைக் கட்டி அழும் பிணமே, உன் உயிர் போகும், இனியொரு முறை இழிவாகப் பேசினால். (சோமநாதர் ஆத்திரப்படுகிறார். கம்பை ஓங்கு. வதும், உறுமுவதுமாக இருக்கிறார்....] மதி: உனக்கு மகனாகப் பிறந்தானே, அந்த உத்தமன், முத்துமாணிக்கம்-ஓநாயே, ஓடிவிடு, இந்த இடத்தை விட்டு. சோம: டே, மதிவர்ணா! உன்னை என்ன கதியாக்கு. கிறேன் பார். மதி: பணமாம் பணம்! உன் காலடியில் கொட்டிக் காட்ட முடியும், உன் பெட்டியிலுள்ள பணத்தைப்போல் பல மடங்கு. .