214 சொர்க்கவாசல் தடை, பாடலுக்கு! முடி தாங்கியே! பார்த்தாயா உன் தடை தவிடுபொடியாவதை? வெட்கம் இருக்க வேண்டாமா உனக்கு? நீயும் ஒரு அரசனாக நாட்டை ஆளுகிறாயே நாட்டை! காட்டிலே இருந்து என் அண்ணா கட்டளையிடு கிறான்; உன் தடை உடைபடுகிறது. பூட்டி வைத்துவிட்டு வீரம் பேசுகிறாய் எங்களிடம்.(கோபம் அதிகமாகிறது மன்னனுக்கு...) உருட்டு விழி என்னை ஒன்றும் செய்து விடாது! நாட்டுக்கு நீ அரசன்! ஆனால் என் அண்ணனிடம் தோற்றுப் போன உன்னை நான், அரசன் என்றா மதிப் பேன்! கொலுப்பொம்மை! கொக்கரிக்கும் கொலுப் பொம்மை! பெண்கள்: கொக்கரிக்கும் கொலுப்பொம்மை! திலகா : மதம் கெட்டுவிடும் என்று இந்தப் பரம பக்த ருக்குத் தாங்கமுடியாத பயம்! அதனாலே என் அண்ணனை நாடு கடத்தினாராம்! உண்மைக் காரணம் எனக்குத் தெரியும்! வெற்றி: என்னடி உளறுகிறாய், பேதையே? திலகா: மன்னன் நீ - உன்னை மணம் செய்து கொள்ள மறுத்தாள் குமாரதேவி- உன்னை துச்சமெனக் கருதி சை அரசனான என் அண்ணனிடம் காதல் கொண்டாள்! பொறாமை உனக்கு-- வெட்கம் உனக்கு. ஆகவே சமயம் பார்த்துச் சாகசமாக, என் அண்ணனைப் பழி என் அண்ணனைப் பழி தீர்த்துக் கொண்டாய். வெற்றி: ச்சீ! போக்கிரிப் பெண்ணே! திலகா : மறுக்க முடியாது உன்னால்! இந்த மண்டலம் அறிந்த இரகசியம் இது. போகிறதைப்பார்! அதிகாரத்தை நிலைநாட்ட முடியாத இவனுக்கு அரசன் என்ற பட்டம். மன்னன் கோபமாக வெளியே செல்கிறான்...] அரசன்: துரோகி (பணியாளிடம்] மதிவாணனின் தங்கை திலகவதியை தவனக் காட்டுக் கோட்டைக்கு இழுத்
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/214
Appearance