இரவும் பகலும் இனிமேல் இரவுபகல் உன்னைப் பிரியமாட்டேன். எப் போதும் உன்னையே வணங்குவேன்" என்று பாடுகிறார் மருள்நீக்கியார். நான் ஏற்றாய் அடிக் கே; இர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும். 9 நோயாளி சொல்கிறான்: "சுவாமி, இதுவரைக்கும் செய்ததை மறந்துவிடுங்கள். எப்படியோ உங்க ளிடம் வந்துவிட்டேன். இனிமேல் நீங்கள் சொல்கிற படியே நடக்கிறேன். இரவும் பகலும் உங்கள் உத்தரவுப் படியே மருந்துகளைச் சாப்பிடுகிறேன்' என்கிறான். அதைப் போலவே மருள்நீக்கியார் சொல்கிறார். "நான் பிழைகள் செய்யவில்லையென்று சொல்லவில்லை; எவ்வளவோ செய் திருக்கிறேன். ஆனால் அறியாமற் செய்துவிட்டேன். இ போது தேவரீரை அடைந்தேன். தேவரீரும் ஏற்றுக் கொண்டுவிட்டீர். இனி இரவானாலும் பகலானாலும் தேவரீரைப்பிரியமாட்டேன். தேவரீரின் அடிகளில் விழுந்து கிடப்பேன்" என்று சொல்கிறார். முதலில் "விலக்ககலீர்" என்று பன்மையில் தொடங் கினார்; "ஏற்றாய்" என்று ஒருமையாக இப்போது சொல் கிறார். இறைவனிடம் அவருக்கு நெருக்கம் உண்டாகி விட்டது. மரியாதையாக விலகி நின்று பன்மையிலே பேசத் தொடங்கினவர்,தம்முடைய நோயின் வேதனை யினாலும் இறைவனுக்கும் தமக்கும் உண்டாகிய நெருக்கத் தாலும், 'ஏற்றாய்' என்று சொல்லலானார். இனித் தாம் படும் வேதனையை விரிவாகச் சொல் கிறார். "இந்த நோய் கண்ணுக்குத் தோற்றவில்லை. மற்ற வர்களுக்குத் தெரியாது. வயிற்றிலே வீக்கமோ புண்ணோ வெளிப்படையாக இல்லை. ஆனால் வயிற்றுக்குள்ளே
பக்கம்:இரவும் பகலும்.pdf/18
Appearance