உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இரவும் பகலும் அவனுடைய சிவந்த திருவடிகள் தாமரைபோல் இருக் கின்றன. தாமரை மென்மைக்கும் தண்மைக்கும் எழிலுக் கும் விரிவுக்கும் பொலிவுக்கும் வண்ணத்துக்கும் இருப் பிடம். இறைவனுடைய திருவடிக்கு அதனை உவமை கூறுவது மரபு. தமிழருடைய உவமையுலகத்தில் தாமரை மிக மிக உயர்ந்த பொருள்களுக்கு உவமையாக நிற்பது. வடமொழியிலும் அப்படித்தான். தாமரை என்றாலே பாரத மக்களுடைய கற்பனையில் பல பல நல்ல எண்ணங் கள் உண்டாகும். இறைவனுடைய திருவடி அடியார் களுடைய உள்ளத்தை மிதிக்கச் சேர்வது அன்று. அது மெத்தென்று பூப்போலச் சேரும். தலையிலே கனமுள்ள ஒன்றை வைத்தால் அதைப் பாரம் என்று சொல்வார்கள். ஆனால் பூவை வைத்தால் அதை அலங்காரம் என்று சொல் வார்கள். நம்முடைய உள்ளத்தில் உலகியல் நினைவுகளை யும பற்று முதலியவற்றையும் பாரமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை மாற்றி இறைவனுடைய திருத்தாளை வைத்துக்கொண்டால், பெரிய கல்லைச் சுமந்து கொண்டிருந்த தலையிலிருந்து அக் கல்லை எடுத்துவிட் ட்டுப் பூவைச் சூட்டியது போலாகும். தாமரை தான் இருக்கும் இடத்துக்கு அழகும் மணமும் உயர்வும் தருவதுபோல இறைவன் அடி சேர்ந்த மனம் கவலை நீங்கித் தூய்மை பெற்று ஓங்கி நிற்கும். தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்று வள்ளுவர் கூறுவது இங்கே நினைவுக்கு வருகிறது. ஆயிரம் தாமரை போன்ற தாளையுடையவனாக இறைவனைத் தம் உள்ளத்திலே கண்ட அப்பருக்கு அவ னுடைய அங்கங்கள் கண்கொள்ளாத அளவும் அழகும் உடையவையாக இருப்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/25&oldid=1726764" இலிருந்து மீள்விக்கப்பட்டது