உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடலும் ஆடலும் அப்பர் சுவாமிகள் காட்டும் கற்பனைக் காட்சிகளில் மற்றொன்று. இந்தக் காட்சியில் முக்கியமான பாத்தி ரங்கள் இறைவனும் கங்கையும் உமாதேவியாரும் ஆவர். L வந்து பகீரதனுடைய வேண்டுகோளுக்குக் கங்கை எளிதில் இணங்கவில்லை. பல காலம் தவம் செய்த பிறகு கங்கை தோன்ற, "என்னுடைய முன்னோர்களின் என்புமேல் பாய வேண்டும்" என்று பகீரதன் அவளை வேண்டினான். அப்போது கங்கை வானுலகில் மாத்திரம் உலா கொண்டிருந்தாள். பகீரதனுடைய முன்னோர்கள் ஒரு முனிவரின் சாபத்தால் பாதாளத்தில் எரிந்தனர். அவர்கள் உடம்பு எரிந்து இப்போது என்பாகிக் கிடந்தன. வானுலகத்தில் உலவும் கங்கை பாதாளத்துக்கு வருவ தாவது! அது எத்தனை இழி செயல்! வான் நதி என்ற பெயருடன் தேவருடைய தொடர்பு பெற்று வாழும் அப் பெருமாட்டி பூவுலகத்துக்கே இழியவில்லையே! அப்படி யிருக்கப் பாதாளத்துக்கு இறங்கி வருவது என்பது நடக்கிற செயலா? கங்கையின் உள்ளத்தில் கருணை இருந்தால், பாதாளம் என்ன, அதற்கும் கீழே இறங்கி வரலாம். ஆனால் அவள் உள்ளத்தே அகந்தைதான் இருந்தது. தவத்துக்கு எப் போதும் ஒரு வலிமை உண்டு. தன்னை நோக்கித் தவம் செய்த பகீரதனிடம், "நான் அங்கே வரமுடியாது" என்று சொன்னால் அவன் செய்த தவம் அவளைத் தீய்த்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/52&oldid=1726793" இலிருந்து மீள்விக்கப்பட்டது