உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இரவும் பகலும் இறைவன் தன் கருணைத் திருவிளையாடலைப் புரிந்து விட்டு உமாதேவியை அணுகினான். எம்பெருமாட்டி அவ னோடு பேசவில்லை ; ஊடல் கொண்டாள். சூடினார் கங்கை யாளைச்; சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள் நங்கை யாளும். . கங்கையின் ஆற்றலையும் அகங்காரத்தையும் அடக்கு வது எளிதாக இருந்தது இறைவனுக்கு. ஆனால் உமாதேவி யின் ஊடலை நீக்குவது அத்தனை எளிதன்று. அதனை நீக்க வழி என்ன என்று ஆராய்ந்தான். நல்ல பாட்டைக் கேட் டால் உருகுவது எல்லோருக்குமே இயல்பு. உமாதேவி அன்பர்களுடைய பாட்டிலும் கலைமகளின் வீணை யொலி யிலும் மனம் ஈடுபடுவது வழக்கம். அம்பிகையே இசையில் வல்லவள். பலகால் உமாதேவி ஊடல் கொண்ட துண்டு. அதனைத் தீர்க்க இறைவனும் பல முறைகளை மேற்கொண்டிருக்கிறான். இப்போது தன் தேவியின் ஊடலைத் தீர்க்க இன்னிசையைப் பயன்படுத்தத் திருவுளங் கொண்டான். எப்போதும் சாமவேதத்தை இசைத்துக் கொண்டிருப் பவன் அவன். ஆகவே இப்போது இன்னிசை எழுப்பிச் சாமகானம் செய்தான்; தாளத்தோடே பாடத் தொடங்கி னான். அப்படிப் பாடும்போது அவனுக்கு உற்சாகம் வந்து விட்டது. பாட்டுப் பாடுவதை மட்டுமா அவன் அறிவான்? ஆடவும் தெரிந்தவன் அல்லவா? அதில் அவன் வல்லவன் ஆயிற்றே! நடனத்துக்கு அரசன் என்று அவனை வணங்கு கிறோம். ஆதலின் சாம வேதத்தைத் தாளத்தோடு பாடப் பாட அவனுக்கு ஆடவேண்டுமென்ற நோக்கமும் உண்டா யிற்று; ஆடத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/55&oldid=1726796" இலிருந்து மீள்விக்கப்பட்டது