உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி வாழும் வீடு 59 வீட்டில் ஏழு சாளரங்களை வைத்து, கண்டு மயங்கும் வண்ணம் கவர்ச்சியையும் அதற்குக் கொடுத்து உயிரைக் குடியிருக்க வைத்தார். இது உருவகம். கால்,கை என்பன இரண்டும் சிலேடை யாக வீட்டில் உள்ள தூண்களையும் கை மரங்களையும் குறிக்கும் பெயர்களாகவும், உடம்பிலுள்ள கால்களையும் கைகளையும் குறிக் கும் பெயர்களாகவும் உள்ளன. கழி,சுவர்,வாசல், சாலேகம் என் பன வீட்டிற்கு உறுப்பாகிய பெயர்களாகிக் குறிப்பால் எலும்பு, முண்டம், மலஜலங் கழிக்கும் உறுப்புக்கள் கண் முதலிய ஏழு உறுப்புக்கள் ஆகியவற்றை முறையே புலப்படுத்தின. கழி என்பதற்கு மாமிசம் வன்ற பொருள் உண்டேனும், இறைச்சி என்று பின் வருவதனால் அது பொருந்தாது. இறைச்சி, தோல் என்பன உடம்புக்குரிய பொருளகளாய்க் கூரை, கூரையின்மேலே போடும் வைக்கோல் முதலியவை என்ற உருவகப் பொருள்க ளாகக் கொள்ள நின்றன, உதிர நீர் என்பது உடம்புக்குரிய பொருளை வீட்டுக்குரிய பொருளாக உருவகம் செய்தபடி. ஆகவே, இந்த உருவகத்தில் கால், கை என்பன சிலேடைவகை யாலும்,உதிர நீர் என்பது வெளிப்படையாகவும் உருவகமாகிய பொருளுக்கும் உருவகப்படுத்திய பொருளுக்கும் உரியவையாக நிற்கின்றன.கழி,சுவர், வாசல், சாலேகம் என்பன உருவகமாக வந்ததைச் சார்ந்தன; இறைச்சி, தோல் என்பன உருவகப்படுத்து வதைச் சார்ந்தன. கால் -தூண்,கால் என்னும் அங்கம்.கை - கைமரம், கை யாகிய அங்கம். ஏற்றி-மேலே அமைத்து. கழி - கோல்.நிரைத்து வரிசையாகப் பரப்பி மேய்ந்து - வேய்ந்து; மேய்ந்து என்பது மரூஉ மொழி. படுத்து - பரப்பி, ஏல்வு - பொருத்தம்.இருவாசலையும் இணைந்து ஒன்று போல வைத்தமையால் 'உடைத்தாய்' என்று ஒருமையால் சொன்னார்; சாதியொருமை. சாலேகம் - சாளரம். மால் மயங்குவதற்குக் காரணமான கவர்ச்சி. மால் என்பது மயக்கத்தைக் குறிக்கும் சொல்; இங்கே அதற்குக் காரணமான கவர்ச்சியைக் குறித்தது; காரியவாகுபெயர். ஆவ் -உயிர்.) இது 33-ஆம் பதிகமாகிய திருமறைக் காட்டுத் திரு நேரிசையில் நான்காவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/68&oldid=1726810" இலிருந்து மீள்விக்கப்பட்டது