சிறந்த கோயில் உலகங்கள் பதினான்கு என்று சொல்வார்கள். மேலே ஏழு உலகமும் கீழே ஏழு உலகமும் உள்ளன என்று நூல்கள் கூறும். பிரபஞ்சங்களின் கணக்கோ எண்ணித் தொலையாது. விஞ்ஞானிகள், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன் என்றும், அந்தச் சூரியன் ஒவ்வொன் றையும் சுற்றிக் கிரகங்கள் இருக்கின்றன என்றும் சொல் கிறார்கள். மாணிக்கவாசகப் பெருமான், "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன' என்று பாடுகிறார். தூற்றொரு கோடிக்கு மேலே அண்டங் கள் விரிந்துள்ளன என்று அவருடைய திருவாக்கிலிருந்து உணர்கிறோம். இத்தனையையும் நாம் கண்கூடாக உணர்வதில்லை. நம் கண்முன் இருக்கிற உலகத்தை நாம் ஓரளவு அறிந் திருக்கிறோம். மேல்,கீழ், நடு என்று சொல்லும் மூவகை அடுக்கில் இது நடுவாக உள்ளது. புண்ணியத்தின் ன் பயனையே நுகரும் சொர்க்கபூமியும், பாவத்தின் பயனையே நுகரும் நரகமும்போல இராமல் இரண்டையும் கலந்து நுகரும் இடம் இது. இரவும் பகலும், மேடும் பள்ளமும், குளிரும் வெப்பமும், இன்பமும் துன்பமும், உவகையும் அழுகையுமாக விளங்கும் உலகம் இது. அவரவர்கள் வினைப்பயனை நுகர்வதற்குப் பிற உலகங்களில் வாழ்ந் தாலும், முத்தியைச் சேரவேண்டும் எனின் இங்கே பிறந்து
பக்கம்:இரவும் பகலும்.pdf/75
Appearance