உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. இப்போதே எழுதி வை $ 87 வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை; ஈங்கு இகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர்அறிவார்? இறைவன் முத்தி தர வல்லவன். சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் சத்தி முற்றம் என்னும் திருத் தலத்திற்குச் சென்றபோது இந்த வேண்டுகோளை இறைவ னிடம் சமர்ப்பிக்கிறார் அப்பர். இம்மையிலே முத்தி யின்பத்தைப் பெறலாம். அதை ஜீவன் முத்தி என்பர். இறைவன் திருவடி ஞானவடிவாத லால் அதனை நெஞ்சில்கொண்டால், எல்லாத் துன்பங்களுக் கும் காரணமாகி இறப்பையும் பிறப்பையும் உண்டாக்கும் அஞ்ஞானம் நீங்கும். அது நீங்கவே, துன்பங்கள் விலகி ஜீவன் முத்தி நிலை உண்டாகும். "தொண்டர்கண்டு அண்டிமொண்டு உண்டிருக் கும்சுத்த ஞானம் என்னும் தண்டையம் புண்டரி கம்தருவாய் என்று அருணகிரியார் திருவடியையே ஞானம் என்கிறார். முத்திக்குப் பல பெயர்கள் உண்டு. எவ்வகைத் துன்பமும் இல்லாததாய், அறியாமை யிருளற்ற ஞான ஒளிநிலையமாய் இருத்தலின் அதனைச் செம்மை என்ற சொல்லால் குறிப்பர். நிறைவைச் செம்மை என்று சொல்வது ஒரு வழக்கு. குறையாத இன்பத்தைத் தரும் நிலையாதலின் முத்தி, செம்மையாயிற்று. செம்மையே யாய சிவபதம் அளித்த செல்வமே என்பதில் முத்தியாகிய சிவபதத்தைச் செம்மை என்று மணிவாசகப் பெருமான் கூறினார். சத்தி முற்றத்தில் கந்தர் அலங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/96&oldid=1726840" இலிருந்து மீள்விக்கப்பட்டது