உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சியின் வ.உ. . சி. யின் சென்னை மாகாணப் புதிய செயலாளராக வ.உ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டார். முயற்சியில் சென்னை திருவல்லிக்கேணி கங்கைகொண்டான் மண்டபத்தில் 11.1.1908ல் 'சென்னை ஜனசங்கம்' துவங்கப்பட்டது. தஞ்சைக் கல்லூரி வடமொழி அறிஞர் வரதராஜ சர்மா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சங்கத்தின் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்ட எழுவர் குழுவில் பாரதியும் ஒருவராகப் பணியாற்றினார். இந்த சங்கம் தொடங்கப்பட்ட பிறகு சென்னை நகரில் பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் அதிகமாயின. மூர்ச்சந்தையிலும் திடீர் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. இவற்றில் கலந்து கொண்டு சுரேந்திரநாத் ஆர்யாவும், பாரதியும் பேசினார்கள். சுதேசிவஸ்து பிரச்சாரினி சபா மேலும் 'சுதேசி வஸ்து பிரச்சாரினி சபா' சார்பாக நடத்தப்பட்ட பல கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும், ஆர்யாவும், பாரதியும் பேசினர். பாரதி கவிதைகள் பாடினார். இந்தக் கூட்டங்களில் லஜபதிராய், திலகர், அரவிந்தர், வ.உ.சி. ஆகியோரது படங்கள் விற்கப்பட்டன. பாரதியின் கவிதைகளும் பேச்சுக்களும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு சென்னை மாகாணத் தலைமைச்செயலருக்கு அனுப்பப்பட்டது. பாரதி, ஆர்யா ஆகியோரது பேச்சுக்களில் மக்களைத் தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் போதுமானவை யாக இருப்பின் அவர்களை கைது செய்யலாம் என்று தலைமைச் செயலாளர் அப்போது பதில் எழுதினார். தொடர்கூட்டங்கள் தூத்துக்குடியில் வ.உ.சியின் அழைப்பின் பேரில் 2-2-1908ல் 2000 பேர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பாரதி பேசினார். காஞ்சிபுரத்திலும் ஒரு கூட்டத்தில் அந்த கால கூட்டத்தில் பாரதியார் பேசினார். தூத்துக்குடியில் ஜனசங்கம் அமைக்கப்பட்டதற்கு வாழ்த்துச் செய்தியை பாரதி அனுப்பினார். தடையை மீறிய பாரதி 9.3.1908 அன்று விபினசந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாட 21