உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உள்ளம் கவர் கள்வன் டைய வாழ்க்கைப் பணியாக ஏற்றுக் கொள்ளப் போகிறார். அவ்வாறு பாடும்போது அந்தப் பாடல்கள் சென்று சேரும் இடம் செவியே அல்லவா? அதனால் அதை முத லில் பாடினார். இதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் எடுத்துக் காட்டுகிறார். பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பாற் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து என்று அவர் காரணம் கூறுகிறார். 23 தோடு என்பது வெள்ளோலையைச் சுருட்டி அணி வது. அதனால் அதனைச் சுருள்தோடு என்றும் சொல் வார்கள். தமிழ்ப் பாடலை வெள்ளோலையில் எழுதுவது வழக்கம். "வெள்ளோலை, கண்பார்க்கக் கையால் எழுதா? னை" என்பது ஒளவையார் பாட்டு. வெண் தோடாகிய ஓலையில் எழுதிச் சார்த்துவதற்கு உரிய தேவாரத்தை வெண்தோடு அணிந்த செவியிலே சார்த்துவது பொருத்தந்தானே? அது மாத்திரம் அன்று. இறைவனுடைய திருக் காதில் இரண்டு கந்தருவர்கள் தோடாக இருந்து எப் போதும் இசை பாடிக்கொண்டே இருக்கிறார்களாம். "தோடுவார் காதன்றே தோன்றாத் துணைஐயர் பாடுவார் ஓர்இருவர்க்கு இட்ட படைவீடே என்று ஒருவர் பாடுகிறார். அந்தச் செவி இசைப்பாட்டைக் கேட்பதில் விருப்ப முடையது. ஞானசம்பந்தப் பெருமான் பாடும் தேவாரப் பதிகங்கள் பண்ணோடு கலந்த இசைப் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்.