உள் நின்றவன் இறைவன் எங்கும் இருக்கிறான்; எல்லோருடைய உள் ளத்திலும் இருக்கிறான். ஆயினும் அவ்வாறு அவன் இருப் பதனால் நன்மையைப் பெறுகிறவர்கள் மிகச் சிலரே. மழை பரவலாகப் பெய்யும் போது காட்டிலும், நாட்டிலும், மேட்டிலும்,பள்ளத்திலும் பெய்கிறது. எல்லாவிடத்திலும் பெய்தாலும் அதன் பயன் எல்லாவிடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மேட்டிலே பெய்த நீர் அங்கே தங்காமல் போய் விடுகிறது. காட்டிலே பெய்த நீர் மரங்களுக்குப் பயன்படுகிறது. பள்ளத்திலே பெய்த நீர் தேங்கி யிருக் கிறது. இவ்வாறே இறைவன் யாவருடைய உள்ளத்திலும் எழுந்தருளி யிருந்தாலும் சிலருடைய உள்ளத்திலேதான் அவனுடைய அருளீரம் தேங்கி நிற்கிறது. அதை அத் தகைய பெரியார்களுடைய முகமும் உரையும் செயல்களும் எடுத்துக் காட்டுகின்றன. அப்படி உள்ள சிலரைப் பற்றிச் சம்பந்தப் பிரான் சொல்கிறார். நாம் யாவரும் எதையும் அமைதியாகச் சிந்திப்பதில்லை. மனம் எப்போதும் அலைந்து கொண்டே யிருப்பது.எவ் வளவுதான் அன்புடையவர்களாக இருந்தாலும் அவர்களை ஐந்து நிமிஷம் வேறு நினைவு வராமல் நினைக்க நம்மால் முடி யாது,நம்மோடு நித்தமும் பழகுகிறவர்கள், நம்முடைய நன்மையையே விரும்புகிறவர்கள்,நம் அன்புக்கு உரியவர் இத்தகையவர்களைக்கூட நாம் சிறிது நேரம் நினைத்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/43
Appearance