உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுவிடு தூது அழகிய பொய்கை; நீர் நிரம்பி நிற்கும் பூம் பொய்கை; மெல்லிய தென்றற் காற்று வீச,அதனாலே சிறிய அலைகள் அசையும் பொய்கை. அந்தப் பொய்கையில் தாமரை மலர் கள் மலர்ந்திருக்கின்றன. வளவிய அலைகளையுடைய புன லிலே நன்றாக வளர்ந்த கொடியில் பூத்த கமலத்தில் தேன் நிரம்பியிருக்கிறது. அதனை மாந்திக் களிக்கின்றன வண்டு கள், ஆணும் பெண்ணுமாகிய வண்டுகள் தேனை உண்டு மகிழ்கின்றன. அவற்றின் இன்ப வாழ்வின் சிறப்புத்தான் என்னே! மெத்தென்ற மலரணையிலே நறுமணம் வீசும் சூழலிலே பெடை வண்டோடு ஆண் வண்டு தங்குகிறது. மெல்லிய அலைகள் வீசும்போது மலரும் அசைகிறது. ஆடும் ஊஞ்சலிலே அணை போட்டுப் படுத்தால் எத்தனை இன்பமாக இருக்கும்!

இப்படி இன்பம் நுகரும் வண்டுகள் அந்தக் களிப் பினால் முரல்கின்றன; இன்னிசை பாடுகின்றன. அந்த இனிய ஒலி அலை அலையாக வந்து நுட்பமான செவிப்புலனை யுடையார் காதில் விழுகிறது. பூம்பொய்கையின் கரையில் ஞான சம்பந்த நாயகியார் வந்திருக்கிறார். ஆம்; ஞானசம்பந்தப் பெருமானே இப் போது பெண்ணாகி விட்டார். அந்த நாயகியின் காதில் வண்டு பாடும் இசையலை விழுகிறது. "வண்டின் பாடு கொண்டாட்டந்தான்" என்ற நினைவோடு : தம்முடைய திண்டாட்டமும் நினைவுக்கு வருகிறது. பெடை வண்டோடு