11 நூல்வேண்டேனுரன்வேண்டேன் நூலறிந்தோ ரவைவேண்டேன் பால்வேண்டேன் பழம்வேண்டேன் பதிவேண்டேன் பணிவேண் தால்வேண்டும் புகழ்வேண்டேன் சார்ந்துயருங் காந்தமலை [டேன் மேல்வேண்டும் வரமளிக்கும் வித்தகநின் னருள்பெறினே. 34. பிறர்மகிழப் பலபணிகள் பெரியனசெய் துலகுபுகழ் உறவமையும் நிலைவேண்டேன் உலகத்தை யினிவேண்டேன் நறவமையும் தார்க்கடம்பா நல்லோர்சொல் காந்தமலை அறவரின தின்னருளே யடியனேன் பெற்றிடினே. 36. குலம்வேண்டேன் குணம் வேண்டேன் குறிவேண்டே னுயர்தரத்த நலம்வேண்டேன் நயம்வேண்டேன் நகர்வேண்டேன் உட்லின் பலம்வேண்டேன் காந்தமலைப் பதிவாழுங் குமரேசு [மிகும் உலம் வேண்டு தடந்தோள உன்னருளை யான் பெறினே. 36. குருவேண்டேன் மனுவேண்டேன் குலமனைவி யரைவேண்டேன் மருவுறையுங் குழல்வள்ளி மணவாள காந்தமலை வருபவர்க்கு மலமொழிக்க வாய்ந்தொளிரும் மணிவிளக்கே தருங்கருங் கொடைக்கையாய் தந்தாய்நின் னருள்பெறினே. கலன்வேண்டேன் கடிவேண்டேன் கமழ்மணஞ்சேர் குழலார்தம் நலன்வேண்டேன் நூலறியும் நசைவேண்டே னவையாயும் புலன்வேண்டேன் பொருள்வேண்டேன் புங்கவர்சூழ் காந்தமலை வலன் வேண்டும் வடிவேல் வாய்ந்தநின்ற னருள்பெறினே. தந்தையொடு தாய்வேண்டேன் தமர்வேண்டேன் சேய்வேண்டேன் பந்தமுறும் வினைவேண்டேன் பரிவுடைய மனம்வேண்டேன் அந்தமுறும் பொருள்வேண்டேன் ஆசகலுங் காந்தமலைக் கந்தபிரான் நின்னுடைய கவினருள்யான் பெற்றிடினே.39.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/13
Appearance