சீத மாமதி சூடியாறு 44 தலைக்கி டப்பவுஞ் சீறரா காத வாவம் கேச னேயெனுங் காந்த மாமலை யெந்தலை. சோம்பு லேயெனை யுண்டு விட்டது J தூக்க மில்லை துணிவிலை தேம்பி லேனினை யெண்ணி யித்தனை சிறுமை யெங்குஞ் சிறந்தில வாம்ப கைத்திற நெஞ்ச மொன்றென் வருத்த மித்தனை காண்டியால் காம்பு சூழ்தரு காந்த மாமலை காத லித்தகு கேசனே. பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். உயிரினுக் குயிரே உடலினுக் குயிர்ப்பே உளத்தினுக் குரியதோர் விளக்கே உரையினுக் குணர்வே உணர்வினுக் கின்பே ஒன்றிய இன்பினிற் குறவே பயிருநற் குழவிக் கன்னையே போலும் பண்புடைக் கடவுளே எனக்குப் பயன்றருந் தருவே பயந்தவிர் துணையே பலருமென் பாலன்பு காட்டத் துயரெனை நீங்கத் துளக்கிலா நெஞ்சிற் றுணிவுறக் தந்தநற் குருவே சுத்தஞா னத்தின் சோதியே இதயத் தூமலர் நிறைந்ததோர் வாழ்வே மயர்வகல் முனிவர்க் குள்ளமு தூறும் மதியமு தப்பெரும் பிழம்பே 166. 167.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/46
Appearance