உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 <t 33 கந்தவேள் கதையமுதம் சித்த புருஷர்களில் ஒருவராகிய திருவள்ளுவர் அப்படிச் சொல். கிறாரே, அது என்ன என்று கேட்கலாம் என்று தோன்றுகிறது. "எண்ணிய எண்ணியாங் கெய்துப என்றவுடன் நமது நாக்கில் நீர் ஊறுகிறது. அதற்கு அவர் ஒரு நிபந்தனை சொல்கிறார், எண்ணியார் திண்ணியராகப் பெறின் என்று. எண்ணியவர்கள் திண்ணியராக இருக்க வேண்டுமென்று சொல்கிறார். திண்ணி யர்கள் என்றால் உடம்பினால் பலம் உடையவர்களாக இருப்பது என்பது அன்று. எண்ணம் என்பது மனத்தில் உண்டாகிறது. ஆகவே மனம் திண்மையாக இருந்தால் எண்ணம் திண்மையாக இருக்கும். அவர்கள் எண்ணியதை எண்ணியபடி அடைவார்கள் என்கிறார். மனம் திண்மையாக இருப்பதாவது, ஏதேனும் ஒன்றை நினைத் தால் அதன்படி செய்ய முற்பட வேண்டும். வெற்றி பெறுகிற வரைக்கும் மீட்டும் மீட்டும் அதைப் பற்றியே எண்ணிச் செயல்பட வேண்டும். நாம் அப்படி இருப்பது இல்லை. ஒன்றை முதலில் எண்ணுகிறோம். மறுபடியும் மறந்து போகிறோம். பிறகு வேறொன்றை எண்ணுகிறோம். ஒரு பெண் கருவுறுகிறாள். அந்தக் கருவைப் பத்து மாதம் வயிற்றில் அவள் சுமக்க வேண்டும். இடையில் ஏதாவது இடையூறு வந்தால் குழந்தையைக் காண முடியாது. அந்தக் கருவைப் போல நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. அந்த எண்ணம் செய லாகும் மட்டும் திடமாக இருக்க வேண்டும். நாம் அப்படி இருப்பது இல்லை. அந்த எண்ணத்தை நாமே மாற்றுகிறோம். அப்போது கருச்சிதைவு போல, எண்ணச் சிதைவு ஏற்பட்டு விடுகிறது. பிறகு எண்ணிய செய்கை நடக்காது. எவன் ஓர் எண்ணத்தை மீட்டும் மீட்டும் எண்ணி அது செயலாகும் மட்டும் திண்மை உடையவனாக இருக்கிறானோ, அவன் எதை நினைத்தாலும் அதைச் செய்ய முடியும். அதைத் தான் வள்ளுவர் சொல்கிறார். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.' மனத்திலே திண்மை வரவேண்டுமானால் அதற்குப் பயிற்சி வேண்டும். மனம் போனபடி எதையாவது சொல்லி விடுவது,