உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

143

மிக மிக குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் “வரம்” கேட்க பலர் வருவது கண்டு சிந்தை மிக வெந்தான்.

‘ஆ! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே’ என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்கு கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.

நேரே யோகியின் அறைக்குச்சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகிவிடுவது என்று முடிவு செய்து கொண்டான்.

கோபத்துடன் எழுந்தான்! கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக் கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக் கொண்டான். உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.

நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.

அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான்.

யோகி, மங்கையொருவளுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“கோகிலா ! நீ உன்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே பார் இப்போது” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்” என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.

பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில்