இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்:
15–9–1909 | — | தோற்றம்: சி.என்.அண்ணாதுரை |
தந்தை: | — | நடராசன் |
தாய்: | — | பங்காரு அம்மாள் |
சிறிய தாயார் (தொத்தா) |
— | ராஜாமணி அம்மையார் |
பிறந்தகம் | — | சின்ன காஞ்சிபுரம் |
வாழ்க்கைத்துணை | — | இராணி அம்மையார் |
”தொழில் புனைபெயர்: | — | நாட்டுத்தொண்டு-எழுத்தாளர் சௌமியன், வீரன், சமதர்மன், குறிப்போன், சம்மட்டி ஒற்றன், சாவடி, ஆணி, பரதன் |
1929–1934 | — | சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பட்டப்படிப்பு |
26–5–1933 | — | கோவை மாவட்டம் காங்கேயத்தில் முதலாவது செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் திருச்சி சி.என்.சீனிவாசன் தலைமையில் தந்தை பெரியார் துவக்கஉரை ஆற்ற, அறிஞர் அண்ணா – மாணவர் அண்ணாதுரை சொற்பொழிவு நிகழ்த்த, கேட்டு வியப்புற்று, கண்டு பேச தந்தை பெரியார் முயன்று இயலாது போனமை (குடி அரசு 23–7–1933) |
11–2–1934 | — | முதல் சிறுகதை “கொக்கரகோ” ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. |
1–2–1936 | — | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கல்வி அமைச்சர் குமாரசாமி ரெட்டியார் தலைமையில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு. |