உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்:

15–9–1909 தோற்றம்: சி.என்.அண்ணாதுரை
தந்தை: நடராசன்
தாய்: பங்காரு அம்மாள்
சிறிய தாயார்
(தொத்தா)
ராஜாமணி அம்மையார்
பிறந்தகம் சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத்துணை இராணி அம்மையார்
”தொழில் புனைபெயர்: நாட்டுத்தொண்டு-எழுத்தாளர்
சௌமியன், வீரன், சமதர்மன்,
குறிப்போன், சம்மட்டி ஒற்றன்,
சாவடி, ஆணி, பரதன்
1929–1934 சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்
பி.ஏ. ஆனர்சு பட்டப்படிப்பு
26–5–1933 கோவை மாவட்டம் காங்கேயத்தில்
முதலாவது செங்குந்தர் இளைஞர்
மாநாட்டில் திருச்சி சி.என்.சீனிவாசன்
தலைமையில் தந்தை பெரியார்
துவக்கஉரை ஆற்ற,
அறிஞர் அண்ணா – மாணவர்
அண்ணாதுரை சொற்பொழிவு நிகழ்த்த,
கேட்டு வியப்புற்று, கண்டு பேச
தந்தை பெரியார் முயன்று
இயலாது போனமை (குடி அரசு 23–7–1933)
11–2–1934 முதல் சிறுகதை “கொக்கரகோ”
ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது.
1–2–1936 சென்னை பச்சையப்பன் மண்டபத்தில்
கல்வி அமைச்சர் குமாரசாமி ரெட்டியார்
தலைமையில் பார்ப்பனர் அல்லாதார்
இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.