உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


ஆகஸ்டு 1936 தந்தை பெரியாருடன் வடார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளல்
1936 சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.
1937 நவயுகம் ஆசிரியர்.
3–1–1937 சென்னைத் தன்மான இயக்க இளைஞர் மன்ற ஆண்டுவிழாத் தலைமை ஏற்றல்
11–4–1937
16–5–1937
நீதிக்கட்சி செயற்குழு உறுப்பினராதல்,
நீதிக்கட்சி பிரச்சாரக்குழு உறுப்பினராதல்.
1937 விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி ஏற்றல்.
29–8–37 முசிரி தாலுக்கா தன்மான இயக்க மாநாட்டுத் தலைமை உரையாற்றல்
9–12–37 முதற்கவிதை, ‘காங்கிரஸ் ஊழல்’ விடுதலையில்
2–9–38 முதல் மடல் ‘பரதன் பகிரங்க கடிதம்’, விடுதலை.
26–9–38 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம்சாட்டி
எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்னி கிருஷ்ணநாயர் நான்கு மாத
வெறுங்காவல் தண்டனை வழங்கினார். இராணி அம்மையார் சிறை செல்லும் அண்ணாவை
வாழ்த்திய வாழ்த்துச் செய்தி குடியரசு, விடுதலையில் வெளி வந்தது.
13–1–39 தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் — அண்ணா இரங்கற் கூட்டத்தில் உரை.
18–1–39 தமிழர் திருநாள்—சென்னை உயர் நீதிமன்ற கடற்கரையில்
டாக்டர் சி. நடேசனார் படம் திறந்து வைத்தல்.