இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
165
10–2–38 | — | சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்டோர் |
சூலை,1939 | — | முதல் குறும்புதினம் “கோமளத்தின் கோபம்” தொடக்கம் – குடிஅரசில். |
6–1–40 | — | பம்பாயில் பெரியார் அம்பேத்கார் உரையாடல்; மொழிபெயர்ப்பு |
23–3–40 | — | முதல் புதினம், “வீங்கிய உதடு” தொடக்கம் குடி அரசில். |
2–6–40 | — | காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு |
8–11–40 | — | விடுதலையில் தி.க.சண்முகம் நடித்த “குமாஸ்தாவின் பெண்” நாடகத் திறனாய்வு. |
7–3–42 | — | திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம். தலையங்கம் “கொந்தளிப்பில்” புரட்சிக் கவிஞர் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனும் பாடல் முகப்பில். |
14–3–43 | — | சேலத்தில் நாவலர் பாரதியார் உடன் அண்ணா கம்பராமாயணச் சொற்போர். |
5–6–43 | — | ‘சந்திரோதயம்’ நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். |
19–8–44 | — | சேலம் நீதிக்கட்சி மாநாடு — அண்ணாதுரைத் தீர்மானம்– நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். |
15–12–45 | — | சென்னை செயின்ட் மேரி ஆலில் “சிவாஜி கண்ட இந்துராஜ்யம்” நாடக அரங்கேற்றம் — அண்ணா காகப்பட்டராக நடித்தல். |
13–1–46 | — | “பணத்தோட்டம்” கட்டுரை. |