ஏ. வி. பி. ஆசைத்தம்பி பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். திராவிட முன் னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. அண்ணா துரை உள்பட ஆயிரமாயிரம் தோழர்கள் இன்னும் சிறை யிலேதான் இருக்கிறார்கள். அடிமை நாட்டில் அமைதி இருக்காது என்று மக்க ளோடு மக்களாக முன்பு இருந்த ஜவகர்லால் நேரு கூறினா ரல்லவா, அது நூற்றுக்குநூறு உண்மை. ஆனால் பண்டித. ஜவகர் இந்திய பிரதம மந்திரியாக வந்தபின் அதனை அடி யோடு மறந்துவிட்டார். சரியில்லாத சட்டத்தை மாற்றி அமைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய பிரதம மந்திரி நேரு, சிறைச்சாலையின் மூலம், நிலைமையைச் சீர்திருத்த இன்று முயலுகிறார். வெறும் தண்டனை அமைதியை ஏற்படுத்தும் மருந்து அல்ல என்ற உண்மையை சாதாரண நேரு அறிவித்தார்; ஆனால் மந்திரி நேரு மறந்தவர்போல நடிக்கிறார். கடுமையான தண்டனை விதிக்கும்படி பிரதம மந்திரி நேரு. ராஜாஜிக்கு உபதேசம் செய்கிறார். இது ஆளும் கூட்டம் பரம்பரையாக கடைப்பிடிக்கும் முறைதான். எந்தச் சட்டம் எதிர்க்கப்படுகிறதோ அந்தச் சட்டத்தின் துணைகொண்டே, எதிர்ப்பாளர்களுக்கு தண்டனை தருவார் கள் ஆளும் வர்க்கத்தினர். அந்த முறையைத்தான் பிரதம மந்திரி நேரும், ராஜாஜி யும் இன்று கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சமூக மக்கள் 46
பக்கம்:கேட்கவில்லை.pdf/47
Appearance