க: கருப்பன் கூறும் உண்மை அவ்வளவும் அண்டப் புளுகு என்று நான் சொல்லவேண்டும்......
வ: (சிரித்தபடி) தம்பி வேடிக்கையாகப் பேசுதே......
சி: டேய் .... வேடிக்கை இருக்கட்டும். அங்கே போயும் ஏதாவது குளறித் தொலைத்துவிடாதே...தெளிவாக...
க: அழுத்தந்திருத்தமாகச் சொல்லவேண்டும்....
சி: ஆமாம்....ஆமாம்......
க: அண்டப் புளுகுகளை...அப்பா! நாமெல்லாமா அண்டப் புளுகு பேசுவது.....வயிற்றுச் சோற்றுக்கு வகையற்றவர்கள் செயல் அல்லவா அது. நீங்கள்தானே சொன்னீர்கள். (குத்தலாக} நான் பயந்தேபோனேன். நமது அப்பா இவ்வளவு அருமையாக உபதேசம் செய்கிறாரே பொய் பேசுவது தகாது என்று கூறுகிறாரே, இனி அவர் வியாபாரம் என்ன ஆகும் என்று பயந்து போனேன். இப்போது அந்தப் பயம் போய்விட்டது...
சி: போதும், போதும் உன் குறும்புத்தனம்.
க: பொய் பேசச் சொல்லி நீங்களே பள்ளிக்கூடம் நடத்துகிறீர்கள்; அழுத்தந்திருத்தமாகப் பொய் பேசுவது எப்படி என்று இவர் கற்றுக்கொடுக்கிறார். நல்ல உலகமப்பா இது...நல்ல உலகம்...
சி: நாட்டியமாடும் நாடியா பழக்கந்தானே...?
அவன்: அது ஏனுங்க. வேறே புதுமுகம்? சிட்டுப்போல பலது இருக்கு...
சி: இதோ பாரய்யா, நான் என்ன கேட்கறேன், எதுக்கு என்பதைத் தெரிந்துக் கொள்ளாமே...
அ: நல்லா தெரியுதுங்க, நாடியா கொஞ்சம் படபடன்னு பேசும்...
344