பிற்காலத்தில் 19 உரையாசிரியர்களாகச் எனற சிறந்தவர் களில், ஆரிய ஆரிய தர்மத்தையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கும் நோக்குடைய பரிமேலழகருங்கூட, ஒவ்வோர் இடத்துத் தமிழர் நெறி ஆரிய தர்மத்தோடு, மாறுபட்டு உயர்ந்து நிற்பதை உரைக்கத் தவறவில்லை. பக்திப் பாடல்களுங் கூட ஒவ்வோரிடங்களில், புரோகிதரது இயல்பை இழித் துக் கூறவும் ஆரியரைத் தனித்துச் சுட்டவும் செய்கின் றன. "தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய்' அப்பர் வாக்கு அந்த வேற்றுமைக்கே சான்றாம். எனி னும் ஆரியத்தின் தீமையைத் தொகுத்துச் சுட்டிக்காட்டி அதை வேரோடு ஒழிக்கும் முயற்சி சென்ற நூற்றாண்டு நடைபெறவில்லை என்றே கூறலாம். வரலாறு வரையப்படாமல், வரலாற்றறிவு வளர்க்கப்படாமல் இருந்த நாட்டில், மக்கள் உண்மையை எப்படி உணர்ந் திருக்க முடியும் ? வரை ஆரியர் புகுத்திய சா திப் பாகுபாட்டின்படி, அம்மதத் தின் வேர்களான புரோகிதர்களே நூலறிவு பெறவேண்டி யவர்கள், படிப்பதற்குத் தகுதியுடையவர்கள். மற்ற வகுப்பார் படிப்பதே பாபம், தவறு, அதிலும் தமது சூழ்ச்சிகளை உள்ளடக்கிய வேத சாஸ்திரங்களைப் படிப்பதே தண்டனைக் குரியது என்ற கருத்தைப் புகுத்தியிருந்த போது, தமிழ் மக்கள் தம் நிலையைப் புரிந்து கொள்வது எப்படி இயல்வதாகும்? எனவே, ஆரியக் கயிறு சுழற்றிவிடும் பம்பரமாக ஆயினர் தமிழர். சுழற்சியால் விளைந்த மயக்கத்தில், உலகம் தம்மைச் சுற்றுவதாக, மாயையில் ஆழ்ந்தனர். ஆரிய மாயை இருளைப் பரப்பியது. கண்கட்டப்பட்டு காட்டிலே விடப்பட்ட நிலைக்காளாயினர். அடிமைப்பட்ட தோடு குருடாகவும் ஆக்கப்பட்ட கொடுமையில் சிக்கினர். எப்படியோ, ஆரிய ஆதிக்கக்காட்டில் நுழைந்த வெள்ளையர், ஏற்படுத்திக்கொண்ட ஆட்சி முறை, குழப்பம் மிகுந்த காட்டில் ஓரளவு தெளிவு ஏற்படத் துணை செய்தது. கண்கட்டு அவிழ்க்கப்பட, குருட்டுத்தனம் நீங்க அதுவே காரணமாயிற்று. உண்மை சிறிது சிறி
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/20
Appearance