உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 . வகுப்பினரெல்லாம் உரிமையற்றுத் தாழ்ந்து கிடப்பதோ? என்று கேட்பதே, 'வகுப்பு வாதம்' என்றுபார்ப்பனர்களா லும், அவர் தம் பா தந்தாங்கிகளாலும், அவர்களின் புகலிட மாக அமைந்த தேசீயக் கட்சியின் இதழ்களாலும், பறை சாற்றப்பட்டது. உணமையை உணர்த்தக் கருதியே, தெ.இ.ந.சங்கத்தார், 'திராவிடன்' என்று தமிழிலும் 'ஜஸ்டிஸ்' என்று ஆங்கிலத்திலும் இருநாளிதழ்களை வெளி பின்னரே, இதழின் பெயரான 'ஜஸ்டிஸ்' கட்சியின் பெயருமாயிற்று. 'ஜஸ்டிஸ் கட்சி'யே தமிழில் 'நீதிக்கட்சி' என வழங்கியது. யிடலாயினர். . 'ஜஸ்டிஸ்' கொள்கைக்கு வாதாடிற்று. 'திராவிடன் இனவுணர்வை வளர்த்தான். திராவிடத்தின் வீரத் தொண்டர்களான திருவாளர்கள் ஜே. என். இராமநா தன் தி. வி. சுப்பிரமணியம், ஜே. எஸ். கண்ணப்பர் முதலா னோர், நாடுமுற்றும் உள்ள நகரங்களில் எல்லாம்' 'திராவிட முழக்கம்' செய்து வரலானார்கள். அக்ரஹாரம்' அதன் மூலபலத்தோடு எதிர்க்க முனைந்தது. எனினும் அன்று தோன்றிய அக்கிளர்ச்சி இன்றளவும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. நீதி பிறக்காமற் போகவில்லை. C அக்காலத்தில் பார்ப்பனரல்லாதாரிலும் பலர் படித் துப் பட்டமும் பெற்று அரசாங்கப் பதவிகள் பெற முயற் சிக்கத் தொடங்கினர். அரசாங்கத்தின் உயர்தர பதவி களில் பார்ப்பனர்களே அமர்ந்துகொண்டு, மற்றவர்கள் உள்ளே நுழையவே முடியாதபடிச் செய்து வந்ததால், பார்ப்பனரல்லாதாருக்கு மேலும் அநீதி இழைக்கப்படாமல் தடுத்து, அவர்களுக்கும் உத்தியோகங்கள் கொடுக்கும் படிச்செய்யவேண்டுமென நீதிக்கட்சித் தலைவர்கள் அரசாங் கத்தை வற்புறுத்திவந்தனர். அதன் விளைவாக "எல்லா வகுப்பாருக்கும் இடமிருக்கும் வகையிலேயே உத்தியோகங் கள் வழங்கப்படவேண்டும்" எஓர் ஆணை (Order) அர சிறை (Revenue) இலாக்காவில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. 1920-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றது. அரசியல் அறிஞர், பானகலின் மந்திரிசபை அமைந்தது. பானகலின் முயற்சி