உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இதய கீதம் வைதிக வலை, அவர்களை கட்டிப்போட்டது. பாவ புண்ணியம் என்ற பாம்புகள் கடித்து வீழ்த்தின ! 'புதிதாகப் புகுந்தவை'களை புனிதமானவை. புண்ணியத்தைத் தருபவை. தனதான்யாதி சம்பத்துக் களை இம்மையிலும், மோக்ஷ சாம்ராஜ்யத்தை மறுமை யிலும் நல்குபவை என்ற எண்ணங்கள் பரவின-பரப்பப் பட்டன. பக்திப் போதை, தலைக்கேறிற்று தாழ்வு மனப்பான்மை தமிழன் இதயத்தில் இடம் பெறலா யிற்று. இடறி வீழ்ந்தான்- இக்கட்டுக்கு ஆளானான், 'புனிதப் பெருமை கொண்டவையெனக் கூறப்பட்ட வைகளைப் போற்றத் தலைப்பட்டான்! தானும் புனித வழியில் நடந்து, புண்ணிய புருடனாக ஆசை கொண் டான். வாழ்வு வீழ்ந்தது-முடிகள் சாய்ந்தன ! நாகரீக மும் தமிழ்ப் பண்பாடும் சிதறித் சிதைந்தன! விழியில் கண்ணீர் தேக்கக் கூடிய கதியற்ற நிலைக்கு மொழி சீரழிந்தது! மார்க்க போதகர்கள், மதாச்சாரியர்கள், சைவப் பெரியார்கள், வைணவ ஆழ்வார்கள், புத்தபோதகர்கள், ஜைன மதக் காவலர்கள் தமிழ் நாட்டில் உலவத் தொடங்கினர். தழைக்கவேண்டிய தமிழ் மக்களின் மனதை மகேஸ்வரன்பால் மாற்றும் திருப்பணிக்குத் திருப்பிவிடப்பட்டது. ஒரு வாசகத்துக்கும் உருகாதாரை உருகவைக்கும் திருவாசகமும், திருப்பாவையும், இராம காதையும், இதுபோன்றவைகளும் மதப்போட்டிகளால் நிரம்பின. தமிழ் மொழியில் தழைத்தன. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/17&oldid=1740314" இலிருந்து மீள்விக்கப்பட்டது