உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தந்தையின் ஆணை தில் தினமும் ஆறு மைல் நடந்து செல்வதென்றால் மிகவும் சிரமம் என்று அறிந்த அவரது மனைவி, தன் கடைசி நகையையும் விற்று ஒரு சைக்கிள் வாங்கிக்கொள்ள ஏற் பாடு செய்தாள். தினமும் நாடார் காலை எட்டு மணிக் கெல்லாம் மத்தியான சாப்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டு சைக்கிளில் விருதுநகருக்குப் புறப்பட்டு, வேலைகளை முடித்துக்கொண்டு மாலை ஆறு மணிக்குத் திரும்புவார். அவருடைய மூத்த மகனான நடராஜன், அடுத்தவ னான குமார், மூன்றாவது பையன் சேகர் ஆகியோர் விருதுநகரில் படித்து வந்தார்கள். படிப்புக்குப் பணம் செலவழிக்க வேண்டுமே என்ற கவலை நாடாருக்கு வர வில்லை. அதற்குக் காரணம் விருதுநகரிலே பத்தாவது வகுப்பு வரை இலவசமாகக் கல்வி கற்றுத்தர க்ஷத்திரிய வித்தியாசாலை ஒன்று இருக்கிறது. நடராஜன் பத்தாவது வகுப்பிலும், குமார் எட்டாவது வகுப்பிலும், சேகர் ஆறாவது வகுப்பிலும் வாசித்து வந்தனர், சேகர் சிறு பையனாக இருந்ததால் விருதுநகர் போகும்போதும் வரும் போதும் நாடார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்துகொள் வான் மற்றவர்கள் நடந்தே செல்வர். கடைசி பையன் மாணிக்கம் நான்கு வயதுள்ள சிறுவனாகையால் வீட்டி லேயே இருந்தான். 2. விபத்து தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த பாலை வன பட்டிக்காட்டிலும் கூட தீபாவளி ஸ்பெஷல் புரோகிராம்! விருதுநகருக்கு இதுவே முதல் தடவை என்ற நாடக சினிமா விளம்பரங்களும், முகுந்த விலாஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/5&oldid=1740965" இலிருந்து மீள்விக்கப்பட்டது